முகத்தை கூட கழுவமாட்டேன்.. ‘செக்ஸ் டேப்’ நடிகை கேமரூன் டயஸ் சொன்ன சூப்பர் மேட்டர்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: தி மாஸ்க், சார்லஸ் ஏஞ்சல்ஸ், பேட் டீச்சர், செக்ஸ் டேப் உள்ளிட்ட பிரபலமான ஹாலிவுட் படங்களில் நடித்த நடிகை கேமரூன் டயஸ் மகளிர் தினத்தை முன்னிட்டு அளித்த பேட்டி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பல ஹாலிவுட் நடிகர்களுடன் டேட்டிங்கில் உள்ளார் என கிசுகிசுக்கப்பட்டு வந்த கேமரூன் டயஸ் கடந்த 2015ம் ஆண்டு இசைக் கலைஞர் பெஞ்சமின் மேடன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
அதன் பிறகு சினிமாவை விட்டே தான் விலகுவதாக அதிரடியாக அறிவித்த நிலையில், பல ஆண்டுகள் கழித்து பிபிசிக்கு அவர் அளித்த பேட்டி டிரெண்டாகி உள்ளது.

16 வயது முதல்
16 வயது முதல் மாடலிங் துறையில் கலக்கி வந்த நடிகை கேமரூன் டயஸ், ஜிம் கேரி நடிப்பில் வெளியாகி உலகளவில் வெற்றிப்பெற்ற தி மாஸ்க் திரைப்படத்தின் மூலம் 1994ம் ஆண்டு சினிமா உலகில் அறிமுகமானார். தி லாஸ்ட் சப்பர், ஷீ இஸ் தி ஒன், மை பெஸ்ட் ஃபிரெண்ட் வெட்டிங், வெரி பேட் திங்ஸ், சார்லஸ் ஏஞ்சல்ஸ் என ஏகப்பட்ட வெற்றி படங்களில் கிளாமர் ரோல்களில் நடித்து அசத்தினார்.

டாம் க்ரூஸ் ஜோடி
டாம் க்ரூஸ் உடன் 2001ம் ஆண்டு கேமரூன் டயஸ் நடித்த வெண்ணிலா ஸ்கை மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. பின்னர், மீண்டும் இருவரும் இணைந்து நடித்த மைனாரிட்டி ரிப்போர்ட் எனும் ஆக்ஷன் திரைப்படம் 2002ல் வெளியானது. 2010ம் ஆண்டு மீண்டும் இருவரும் இணைந்து நடித்த நைட் அண்ட் டே படம் பாலிவுட் நடிப்பில் ஹிரித்திக் ரோஷன், கத்ரீனா கைஃப் நடிப்பில் பேங் பேங் எனும் டைட்டிலில் வெளியானது.

செக்ஸ் டேப்
2011ம் ஆண்டு கேமரூன் டயஸ் நடிப்பில் வெளியான பேட் டீச்சர் திரைப்படத்தின் காட்சி இன்றும் சமூக வலைதளங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன. தனது மார்பகத்தை பெரிதாக்க அதிக காசு தேவைப்படுவதால் ஒரு டீச்சர் பார்ட் டைமாக கிளாமர் குயினாக வேலை செய்வது போல அதில், காட்சிகள் இடம்பெற்று இருக்கும். கடந்த 2014ம் ஆண்டு வெளியான செக்ஸ் டேப் திரைப்படம் பேட் டீச்சரையும் மிஞ்சியிருக்கும்.

திருமணத்திற்கு பிறகு
ஹாலிவுட்டின் லைம் லைட்டில் இருந்து விலக வேண்டும் என முடிவு செய்த கேமரூன் டயஸ் கடந்த 2015ம் ஆண்டு இசைக் கலைஞர் பெஞ்சமின் மேடன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு குடும்பத்தையும் குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள சினிமாவில் இருந்து அதிரடியாக விலகினார்.

முகத்தை கூட கழுவமாட்டேன்
சினிமாவை விட்டு விலகிய கேமரூன் டயஸ் கடந்த 2020ல் வெளியான டிவி தொடரான The Drew Barry More Showவில் கலந்து கொண்டார். இந்நிலையில், மகளிர் தினத்தை முன்னிட்டு அவர் அளித்த பேட்டி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. அழகு சாதன பொருட்களை பயன்படுத்தவே தனக்கு விருப்பம் இல்லை என்றும் சினிமாவை விட்டு விலகிய பின்னர் என் முகத்தை கூட அதிகமாக கழுவியது இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஹாலிவுட் வலை
மேலும், ஹாலிவுட் ஒரு Trap போன்றது என்பதை பொறுமையாகத்தான் புரிந்து கொண்டேன். அந்த செல்வாக்கு போதை வலையில் சிக்கிக் கொள்ளாமல் நமக்கான நிஜ வாழ்க்கையை தேடி ஓட வேண்டும் என நான் நினைத்தது தான் சினிமாவை விட்டு விலக காரணமே என்றும், கிட்டத்தட்ட 100 மில்லியன் டாலர்கள் சம்பளம் வரக் கூடிய பல படங்கள் என் கைவசம் இருந்த நேரத்தில் அப்படியொரு முடிவை எடுக்க காரணமே இந்த மேக்கப், லைம்லைட், பிரைவசி இல்லாத வாழ்க்கை பிடிக்காதது தான் எனக் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











