24வது பாண்ட் படத்தின் பெயர் என்ன தெரியுமா...?
லண்டன்: 24வது ஜேம்ஸ்பாண்ட் படம் தொடங்கப் போகிறது. பெயர் கூட வைத்தாகி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. டேணியில் கிரேக் முற்றிலும் புதுப் பொலிவுடன் களம் இறங்குகிறார்.
இந்தப் படம் கடைசியாக வந்த ஸ்கைபால் படத்தின் தொடர்ச்சியாகும்.
டேணியல் கிரேக் பாண்ட் வேடத்தில் நடிக்கிறார். சாம் மெண்டஸ் இயக்குகிறார்.

இது 24...
பாண்ட் பட வரிசையில் இது 24வது படமாகும். கடைசியாக வந்த படம் ஸ்கைபால்.

செமத்தியான வசூல்
ஸ்கைபால் உலகம் முழுவதும் செமத்தியாக வசூல் செய்தது. அதாவது 700 மில்லியன் பவுண்டு வசூல் செய்தது. இங்கிலாந்திலேயே அதிக அளவில் வசூலித்த படம் என்ற பெயரையும் பெற்றது.

கிரேக்கை விட மெண்டஸுக்கு வரவேற்பு
டேணியல் கிரேக்கை விட ஸ்கைபால் படத்தின் இயக்குநர் சாம் மெண்டஸுக்குத்தான் நிறைய பாராட்டுக்கள் குவிந்தன. தொடர்ந்து அவர் கிரேக்குடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளும் குவிந்தன. எனவே மீண்டும் இருவரும் இணைகின்றனர்.

டெவில் மே கேர்
24வது ஜேம்ஸ் பாண்ட் படம் தற்போது தயாராகப் போகிறது. இதற்கு டெவில் மே கேர் 'Devil May Care' என்று பெயரிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

2008 நாவல்
டெவில் மே கேர் என்பது செபாஸ்டியன் பால்க்ஸ் என்பவர் 2008ம் ஆண்டு எழுதிய நாவலாகும். ஜேம்ஸ் பாண்ட் கேரக்டரை உருவாக்கியவரான இயான் பிளமிங்கின் 100வது பிறந்த நாளையொட்டி எழுதப்பட்ட நாவல் இது. இதைத்தான் அதே பெயரில் தற்போது படமாக்கவுள்ளனர்.

கதை என்ன..?
தீய எண்ணம் கொண்ட ஒரு வேதியியல் வல்லுநர் டாக்டர் ஜூலியஸ் கார்னர். இவர் இங்கிலாந்தை அழிக்கும் திட்டத்துடன் செயல்படுகிறார். அதை பாண்ட் முறியடித்து இங்கிலாந்தைக் காப்பாற்றுகிறார். இதுதான் படத்தின் கதைக் கருவாம்.


Click it and Unblock the Notifications











