திருமணமான 4வது நாளே கோர்ட்டுக்கு சென்ற நடிகர்: விவாகரத்து கிடைச்சாச்சு

By Siva

நியூயார்க்: ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜும், அவரின் நான்காவது மனைவியும் முறைப்படி விவாகரத்து பெற்றுவிட்டனர்.

பிரபல ஹாலிவுட் நடிகர் நிக்கோலஸ் கேஜ் மேக்கப் கலைஞரான எரிகா கோய்கேவை கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டார். இது அவரின் நான்காவது திருமணம்.

Nicolas Cage gets diovrce from wife of four days

55 வயதில் நான்காவது திருமணம் செய்த நான்கே நாளில் விவாகரத்து கோரி விண்ணப்பித்து திரையுலக பிரபலங்களையும், ரசிகர்களையும் அதிர வைத்தார் நிக்கோலஸ் கேஜ்.

அளவுக்கு அதிகமாக மது அருந்திய நிலையில் இருந்த தன்னிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என்று எரிகா கூறியதும், அவர் பேசியது என்னவென்று சரியாக புரியாமல் சம்மதம் தெரிவித்ததாக நிக்கோலஸ் கேஜ் தெரிவித்தார். குடிபோதையில் இருந்த தன்னை எரிகா ஏமாற்றிவிட்டதாகவும், அதனால் அவரிடம் இருந்து விவாகரத்து அளிக்குமாறும் கூறி அவர் நீதிமன்றம் சென்றார்.

எரிகா தனது குற்றப் பின்னணியையும், தனக்கு இன்னொருவருடன் தொடர்பு இருப்பதையும் மறைத்து என்னை ஏமாற்றிவிட்டார். எதுவும் தெரியாமல் ஏமாந்த எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறியிருந்தார் நிக்கோலஸ்.

இந்நிலையில் நிக்கோலஸ் கேஜ், எரிகாவுக்கு விவாகரத்து வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நெவாடா மாநிலத்தில் உள்ள கிளார்க் கவுன்ட்டி நீதிமன்றம் கடந்த மாதம் 31ம் தேதி அவர்களுக்கு விவாகரத்து வழங்கியுள்ளது.

முன்னதாக திருமணம் முடிந்த கையோடு நிக்கோலஸ் கேஜும், எரிகாவும் ஹோட்டல் வாசலில் நின்று சண்டை போட்டுள்ளனர். இருப்பினும் இப்படி திருமணமான கையோடு பிரிவார்கள் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. நிக்கோலஸை காதலிக்கத் துவங்கிய பிறகு தனது கெரியர் பாதிக்கப்பட்டதாக எரிகா குற்றம் சாட்டியிருந்தார். மேலும் நிக்கோலஸிடம் இருந்து இழப்பீடு வாங்கித் தர வேண்டும் என்றார்.

விவாகரத்து குறித்த தகவல் வெளியாகியுள்ளதே தவிர எரிகாவுக்கு பணம் வழங்க நீதிபதி உத்தரவிட்டாரா, இல்லையா என்பது தெரியவில்லை. நிக்கோலஸ் கேஜுக்கு இவ்வளவு சீக்கிரத்தில் விவாகரத்து கிடைத்துவிட்டதே என்று அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X