ஆடை இல்லை, அதனால் பிராட் பிட்டுடன் திருமணம் இல்லை: நடிகை ஏஞ்சலினா ஜூலி
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆடை இல்லாததால் நடிகர் பிராட் பிட்டை தற்போதைக்கு திருமணம் செய்துகொள்ள திட்டம் இல்லை என்று ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தெரிவித்துள்ளார்.
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி திருமணமான நடிகர் பிராட் பிட் மீது காதல் கொண்டார். அதன் பிறகு பிராட் பிட் ஜூலியுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார்.
திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தி வரும் அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. மேலும் அவர்கள் 3 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.

குழந்தைகள்
ஜூலியையும், பிட்டையும் திருமணம் செய்துகொள்ளுமாறு அவர்களின் குழந்தைகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

திருமணம்
குழந்தைகள் வலியுறுத்தலை அடுத்து ஜூலியும், பிட்டும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகின.

இந்தா, அந்தா
ஜூலிக்கும், பிட்டுக்கும் இந்த மாதம் திருமணம் அடுத்த மாதம் திருமணம் என்று செய்திகள் மட்டும் தான் வெளியாகின்றன.

ஆடை
எதுவுமே தயாராக இல்லை. என்னிடம் சரியான ஆடை இல்லை. அதனால் தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் திட்டம் இல்லை என்று ஜூலி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











