twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 'நோ டைம் டூ டை'.. பாக்ஸ் ஆபிஸில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

    |

    லண்டன்: நோ டைம் டூ டை திரைப்படம் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸில் வசூலித்த தொகை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

    ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் 25 வது படமான நோ டைம் டூ டை திரைப்படம் கடந்த 30ஆம் தேதி பிரிட்டன் மற்றும் இந்தியாவில் ரிலீஸ் ஆனது.

    Big Breaking: நானும் நாக சைதன்யாவும் பிரிகிறோம்.. நடிகை சமந்தா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!Big Breaking: நானும் நாக சைதன்யாவும் பிரிகிறோம்.. நடிகை சமந்தா அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

    கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போதுதான் ரிலீஸ் ஆகி உள்ளது.

    பலமுறை மாற்றப்பட்ட ரிலீஸ் தேதி

    பலமுறை மாற்றப்பட்ட ரிலீஸ் தேதி

    கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இப்படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் ஆன நிலையில் ஓராண்டு கழித்து தற்போதுதான் படம் திரையரங்கில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கிடையே பலமுறை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின்னர் மாற்றப்பட்டது.

    ஜேம்ஸ் பாண்ட்டுக்கு ரசிகர்கள்

    ஜேம்ஸ் பாண்ட்டுக்கு ரசிகர்கள்

    பிரிட்டிஷ் ரகசிய உளவாளியான ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்திற்கு உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதனாலேயே அந்த கேரக்டரை மைய்யப்படுத்தி இதுவரை 25 படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு படமும் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் வசூலை குவித்து வருகிறது.

    25 வது படம்

    25 வது படம்

    தற்போது 25 படமாக டேனியல் க்ரேக் நடிப்பில் நோ டைம் டூ டை திரைப்படம் வெளியாகியுள்ளது. நோ டைம் டூ டை படத்தை கேரி ஜோஜி ஃபுகுனகா இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் ராமி மாலேக், லீ செய்டக்ஸ், லாஷனா லின்ச், பென் விஷா, நோமி ஹாரிஸ், ஜெஃப்ரி ரைட் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

    இந்தியாவில் ரூ 2.25 கோடி

    இந்தியாவில் ரூ 2.25 கோடி

    இந்த படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் 2.25 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் பல மாநிலங்களில் தியேட்டர்கள் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. சில மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ள திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    4.5 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட்ஸ்

    4.5 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்ட்ஸ்

    ஜேம்ஸ் பாண்ட் படத்திற்கு ஐரோப்பாவில் பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. நோ டைம் டூ டை திரைப்படம் யுனைடெட் கிங்டமில் அதன் முதல் நாள் வசூல் 4.5 மில்லியன் பிரிட்டிஷ் பவுண்டுகளை தாண்டியது. அதாவது இந்திய ரூபாயில் 45 கோடி ரூபாய்க்கு மேல் ஆகும்.

    டேனியல் க்ரேக்கின் கடைசி ஜேம்ஸ் பாண்ட்

    டேனியல் க்ரேக்கின் கடைசி ஜேம்ஸ் பாண்ட்

    வரும் நாட்களில் இந்த படம் அதிக வரவேற்பை பெறும் என்றும் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் கடைசி 4 படங்களான கேஸினோ ராயலே, குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைஃபால், ஸ்பெக்ட்டர் ஆகியவற்றில் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்தில் நடித்த டேனியல் க்ரேக், ஜேம்ஸ் பாண்ட்டாக கடைசியாக நடிக்கும் படம் நோ டைம் டூ டை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    No time to Die: Day 1 box office collection has been revealed. No time to die film earned Rs 2.25 crore at the box office in India.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X