என் பட கதையை யாராலும் காப்பியடிக்க முடியாது: தொடையைத் தட்டும் இயக்குனர்
லாஸ் ஏஞ்சல்ஸ்: தனது கதையை யாராலும் காப்பியடிக்கவே முடியாது என்று ஸ்பெக்டர் எனும் ஜேம்ஸ் பாண்ட் பட இயக்குனர் சாம் மென்டீஸ் தெரிவித்துள்ளார்.
தற்போதைய ஜேம்ஸ் பாண்ட் டேனியல் கிரைக் நடித்து வரும் பாண்ட் படம் ஸ்பெக்டர். 24வது ஜேம்ஸ் பாண்ட் படமான ஸ்பெக்டரை சாம் மென்டீஸ் இயக்கி வருகிறார். இதில் கவர்ச்சி நாயகி மோனிகா பெலுச்சி நடித்து வருகிறார்.
படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

நாவல்
இயான் பிளெமிங் எழுதிய நாவலைத் தழுவி ஸ்பெக்டர் படத்தை எடுத்து வருகிறார்கள்.

வில்லன்
மாஃபியா ஏஜென்சி நடத்தி வரும் வில்லன் உலக நாடுகளின் ராணுவத்திற்கே தண்ணீர் காட்டுகிறார். வில்லனை ஸ்பெக்டர் என்ற ஏஜென்சி நடத்தி வரும் நம்ம பாண்ட் கிரேக் எப்படி அடக்குகிறார் என்பது கதை.

சீக்ரட் சர்வீஸ் இல்லையா?
ஜேம்ஸ் பாண்ட் தனியாக ஏஜென்சி வைத்துள்ளாரா, அவர் இங்கிலாந்தின் ரகசிய போலீஸாக அல்லவா இருந்தார் என்று கேட்பவர்களுக்கு படத்தில் பதில் உள்ளதாம்.

மசாலா தூக்கல்
வழக்கம் போல இந்த ஜேம்ஸ் பாண்ட் படத்திலும் சிலு சிலு காதல், பரபர சண்டை, சேசிங் காட்சிகள் உள்ளதாம். ஆனால் சாம் மென்டீஸ் மசாலாவை கொஞ்சம் தூக்கலாக சேர்த்துள்ளாராம்.

ஹேக்
அண்மையில் ஹேக்கர்கள் சோனி நிறுவன கம்ப்யூட்டர்களை ஹேக் செய்தபோது ஸ்பெக்டர் கதையும் சுடப்பட்டது. ஆனால் சாம் மென்டீஸோ கொஞ்சமும் பதட்டம் அடையாமல் தனது கதையை யாராலும் திருட முடியாது. அவர்கள் ஹேக் செய்தால் என்ன என்று கூலாக கேட்கிறார்.


Click it and Unblock the Notifications