twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அமெரிக்க 'அதிபர்' ஆக ஆசைப்படும் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி

    By Siva
    |

    நியூயார்க்: ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி அமெரிக்க அதிபராக விரும்புவதாக அவரது உறவினர் ஸ்டார்லா தெரிவித்துள்ளார்.

    பிரபல ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனிக்கு உலக அளவில் ரசிகர்களை விட ரசிகைகள் அதிகம். அவருக்கு 53 வயதானாலும் க்ளூனி என்றால் உருகும் ரசிகைகள் ஏராளம். இந்நிலையில் அவருக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது.

    அவரின் திருமணம் காதல் திருமணம் தான்.

    வழக்கறிஞர்

    வழக்கறிஞர்

    இங்கிலாந்தைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞரான அமால் அலாமுத்தீனுக்கும், க்ளூனிக்கும் கடந்த ஏப்ரல் 28ம் தேதி திருமணம் நிச்சயமானது.

    அரசியல்

    அரசியல்

    ஜார்ஜ் க்ளூனிக்கு அரசியலில் குதிக்கும் திட்டம் உள்ளது. அவரது அரசியல் பிரவேசத்திற்கு அவரின் வருங்கால மனைவி அமல் உதவி செய்வார் என்று க்ளூனியின் உறவினரான ஸ்டார்லா தெரிவித்துள்ளார்.

    அதிபர்

    அதிபர்

    க்ளூனி செனேடராக விரும்பவில்லை. அவர் அமெரிக்க அதிபராக விரும்புகிறார். அதிபராக அவர் பேராவலுடன் உள்ளார் என்று க்ளூனியுடன் கடந்த 20 ஆண்டுகளாக பழகி வரும் ஸ்டீபன் ஹென்றி தெரிவித்துள்ளார்.

    மாற்றம்

    மாற்றம்

    க்ளூனி நினைத்தால் ரசிகர்களை எளிதில் கவர முடியும். அவர் அமெரிக்காவில் மாற்றத்தை கொண்டு வர விரும்பினால் அதை அவரால் எளிதில் செய்ய முடியும் என்றார் ஸ்டீபன்.

    அமல்

    அமல்

    36 வயதாகும் அமல் 53 வயதில் க்ளூனியை மறுபடியும் திருமணம் செய்ய சம்மதிக்க வைத்துள்ளது சிறப்பானது. அவர் நிச்சயம் அருமையான மனைவியாக இருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை என்று கூறினார் ஸ்டீபன்.

    அடுத்த ஒபாமா

    அடுத்த ஒபாமா

    க்ளூனியும், அமலும் அடுத்த பாரக், மிஷலாக இருப்பார்கள். தான் சரியான நபரை தேர்வு செய்துள்ளதாக க்ளூனி நினைக்கிறார். அவர் வாழ்வு முழுமை அடையும் என்றார் ஸ்டீபன்.

    முதல் திருமணம்

    முதல் திருமணம்

    க்ளூனி முன்னதாக தாலியா பால்சம் என்ற நடிகையை 1989ம் ஆண்டு திருமணம் செய்து 1993ம் ஆண்டு அவரிடம் இருந்து பிரிந்தார். அதன் பிறகு அவர் வாழ்வில் பல காதலிகள் வந்து சென்றனர். ஆனால் அவர் யாரையும் திருமணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Hollywood star George Clooney wants to be the president of the US, said his aunt Starla.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X