80000 பேருக்கு முன் பிராவை விலக்கி.... பேன்டீஸை இறக்கி...! - மடோனாவின் 'ஓல்ட் டெக்னிக்!'

By Shankar

 Madonna
பிரான்ஸில் நடந்த இசை நிகழ்ச்சியின் போது பிரபல பாப் பாடகி மடோனா தன் உள்ளாடைகளை விலக்கி, ரசிகர்களை ஏகத்துக்கும் உசுப்பேற்றியது மீண்டும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

பிரபல பாப் பாடகி மடோனோ தன் மகளுடன் உலக இசைப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

கடந்தமாதம் அவர் ஆப்கானிஸ்தான் நாட்டின் இஸ்தான்புல் நகரில் இசைக்கச்சேரி நடத்தியபோது, மேடையில் மிகக் கவர்ச்சியாக தோன்றினார் (அம்மணிக்கு வயசு 53!). 55000 ரசிகர்கள் முன்னிலையில் அவர் தனது வலப்பக்க பிராவை லேசாக இறக்கி முன்னழகைக் காட்டி அதிர வைத்தார்.

இது பெரும் சர்ச்சையையும் விமர்சனங்களையும் கிளப்பியது.

இந்த சர்ச்சை ஓயும் முன்பே, மீண்டும் ஒரு படி கீழிறங்கிவிட்டார் மடோனா.

கடந்த சனிக்கிழமை அன்று பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் அவர் இசை நிகழ்ச்சி நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு 80000 ரசிகர்கள் திரண்டிருந்தனர்.

மேடையில் பேய் வேகத்தில் ஆட்டம் போட்ட மடோனா, ரொம்ப கூலாக தனது இடது பக்க பிராவை விலக்கி முன்னழகை முழுசாகக் காட்ட, ரசிகர்கள் திக்குமுக்காடினர். அடுத்து அவர்களை இன்னும் அதிர வைக்கும் விதத்தில் தனது பேன்டின் பக்கவாட்டு ஜிப்பை சரக்கென்று இழுக்க, அது கீழே இறங்கி அவரது மெல்லிய பேன்டீஸைக் காட்டியது. சில நொடிகள் கிட்டத்தட்ட நிர்வாண கோலத்தில் தரிசனம் தந்தார்.

அப்படியே பின்பக்கம் திரும்பி கொஞ்ச நேரம் நின்றார். முதுகில் நோ பியர் என்று வேறு எழுதப்பட்டிருந்தது.

மடோனா இப்படி நடந்து கொள்வது புதிதல்ல. அவர் ஏற்கெனவே 1995-ல் மேடையில் ஒரு கச்சேரியின்போது சட்டென்று நிர்வாணமாகி அதிர்ச்சி கொடுத்தார்.

மடோனாவின் இந்த செயலை பத்திரிகை மற்றும் பார்வையாளர்களில் பலர் விமர்சித்துள்ளனர்.

அதேநேரம் சில ரசிகர்கள் 'சூப்பர்ப் ஸீன்' என்று கொண்டாடவும் தவறவில்லை!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X