2 முறை ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகை ஒலிவியா மறைவு.. திரையுலகம் இரங்கல்!
பாரிஸ்: ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஹாலிவுட் நடிகை ஒலிவியா டி ஹாவிலாண்ட் காலமானார் .
பிரபல ஹாலிவுட் நடிகை ஒலிவியா டி ஹேவிலேண்ட். கேப்டன் பிளட், த அட்வென்சர்ஸ் ஆப் ராபின் ஹுட் (1938), கான் வித் த விண்ட் (1939) உட்பட சுமார் 49 ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.

டு ஈச் ஹிஸ் ஓன் (1946). த ஸ்னேக் பிட் (1948), ஹேரஸ் (Heiress) உட்பட பல படங்கள் அவர் நடிப்புக்காகப் பேசப்பட்டன. நடிகை ஜோன் ஃபான்டைனின் (Joan Fontaine) சகோதரியான இவர், சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதுகளை இரண்டு முறை பெற்றிருக்கிறார். 1946 மற்றும் 1949 ஆம் ஆண்டுகளில் வெளியான டு ஈச் ஹிஸ் ஓன் மற்றும் த ஹேர்ரஸ் படங்களுக்காக ஆஸ்கர் விருதுகளைப் பெற்றுள்ளார்.
ஆஸ்கர் விருதுக்கு அவர் நடித்த பல படங்களுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட அவர் ஆஸ்கர் தவிர, கோல்டன் குளோப் உட்பட பல்வேறு விருதுகளை தனது சிறந்த நடிப்புக்காகப் பெற்றுள்ளார். ஹாலிவுட் ஒப்பந்த முறைக்கு எதிராக போராடி வெற்றி பெற்ற இவர், பாரிஸ் நகரில் வசித்து வந்தார். இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக அவர் கடந்த 25 ஆம் தேதி உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 104.
இதை நியூயார்க்கை சேர்ந்த அவரது தொடர்பாளர் லிசா தெரிவித்துள்ளார். ஒலிவியா டி ஹேவிலேண்ட்டின் மறைவை அடுத்து ஹாலிவுட் திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











