கொடுமை கொடுமை.. "தாய்ப்பாலில்" ஐஸ் பக்கெட் சவாலை நிறைவேற்றிய நடிகை!
ஐஸ் பக்கெட் சவாலை இப்போது பப்ளிசிட்டி ஸ்டண்ட் ஆக்க ஆரம்பித்து விட்டனர் சிலர். நல்ல நோக்கத்திற்காக என்று கூறி ஆரம்பிக்கப்பட்ட இதை வைத்து இப்போது பலரும் விளம்பரம் தேட ஆரம்பித்துள்ளனர்.
யாரைப் பார்த்தாலும் பக்கெட்டும், தண்ணீருமாக போஸ் கொடுத்து பேஸ் புக் பக்கங்களை நிரப்பி வருகிறார்கள்.
இந்த நிலையில் ஒலிவியா வைல்ட் என்ற நடிகை தாய்ப்பாலில் குளியல் போட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளார்.

ஜேசனின் பார்ட்னர்
ஹாலிவுட் நடிகரும், காமெடியனுமான ஜேசன் சுடெய்க்கிஸின் பார்ட்னர்தான் இவர். 2011 முதல் இணைந்து வாழ்ந்து வருகின்றனர்.

ஐஸ் பக்கெட் சவாலுக்கு அழைப்பு
இவரை ஐஸ் பக்கெட் சவாலுக்கு டயானா அக்ரோன், உள்ளிட்ட பலரும் அழைத்திருந்தனர்.

தாய்ப்பாலில் குளியல்
இதையடுத்து ஒலிவியாவும் கலந்து கொண்டு குளித்தார். ஆனால் தண்ணீர் வெள்ளையாக இருந்தது. அதுகுறித்து அவர் கூறுகையில் இது தாய்ப்பாலாகும் என்று கூறி அதிர வைத்தார்.

ராத்திரி பூராவும் செலவிட்டு சேகரித்தேன்
மேலும் அவர் கூறுகையில் இந்த தாய்ப்பாலை சேகரிக்க இரவு பூராவும் நான் செலவிட வேண்டியிருந்தது என்று கூறி மேலும் அதிர வைத்தார்.

தண்ணீர் கிடைக்காததால்
ஏன் தாய்ப்பாலில் குளித்தீர்கள் என்று கேட்டால், தண்ணீர் கிடைக்கவில்லை. எனவேதான் தாய்ப்பாலில் குளித்தேன் என்று விளக்கினார் ஒலிவியா.

ஸாரி சும்மா ஜோக்கு...
ஆனால் அவரே பின்னர் ஸாரி, அது தாய்ப்பால் இல்லை ஜோக்கடித்தேன் என்றும் கூறியுள்ளார்.
எதுவுமே விளங்கவில்லையா...!


Click it and Unblock the Notifications











