twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாப் அரசன்.. உலகையே நடனத்தால் அசத்தியவர்.. 50 வயதில் இந்த நாளில் தான் மறைந்தார் மைக்கேல் ஜாக்சன்

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: 2009ம் ஆண்டு ஜூன் 25ம் தேதி உலகத்தையே தனது நடனத்தால் வியக்க வைத்த மைக்கேல் ஜாக்சன் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

    மைக்கேல் ஜாக்சனின் நினைவு தினத்தை முன்னிட்டு, ஹாஷ்டேக்குகளை உருவாக்கியும் சமூக வலைதளங்களில் பதிவுகளை போட்டும் ரசிகர்கள் அந்த மாமேதையை நினைத்து வருகின்றனர்.

    50வது வயதில் உயிரிழந்த மைக்கேல் ஜாக்சன், உயிரிழந்து 11 ஆண்டுகள் ஆகும் நிலையிலும், இன்னும் அவர் உயிரோடு தான் இருக்கிறார் என நம்புவோரும் உண்டு.

    கல்வான் மோதலுக்கு எதிர்ப்பு.. சீனப் பொருட்களை கொட்டி தீ வைத்துக் கொளுத்திய பிரபல இயக்குனர்! கல்வான் மோதலுக்கு எதிர்ப்பு.. சீனப் பொருட்களை கொட்டி தீ வைத்துக் கொளுத்திய பிரபல இயக்குனர்!

    உயிரோடு

    உயிரோடு

    மைக்கேல் ஜாக்சனை போலவே இருக்கும் சில டிக்டாக் பிரபலங்களும், தாங்கள் தான் மைக்கேல் ஜாக்சன் என சொல்லிக் கொண்டு சமூக வலைதளங்களில் வைராலாகி வருகின்றனர். அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் 1958ம் ஆண்டு 8வது குழந்தையாக பிறந்தவர் மைக்கேல் ஜாக்சன்.

    5 வயது முதலே

    5 வயது முதலே

    உடன்பிறந்த சகோதரர்களுடன் இணைந்து தனது 5ம் வயதிலேயே இசை உலகில் காலடி எடுத்து வைத்த மைக்கேல் ஜாக்சன், தனது 13வது வயதில் இருந்து தனியாக பாட ஆரம்பித்தார். மைக்கேல் ஜாக்சனின் மூன் வாக் நடனத்திற்கு மயங்காத ஆட்களே இந்த உலகில் இல்லை என்று சொல்லும் அளவுக்கு தனது அசாதாரண நடன திறமையால் உலகையே ஆட்டி படைத்தார்.

    பிளாஸ்டிக் சர்ஜரி

    பிளாஸ்டிக் சர்ஜரி

    கருப்பு நிறமாக இருந்த மைக்கேல் ஜாக்சன் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டு வெள்ளை நிறமாக மாறினார் என்ற வதந்திகள் பரவிய நிலையில், மூக்குக்கு மட்டுமே பிளாஸ்டிக் சர்ஜரி செய்ததாகவும், தோல் நோய் காரணமாகவே தனது நிறம் மாறியதாகவும் மைக்கேல் ஜாக்சன் விளக்கம் அளித்திருந்தார்.

    இசை ஆல்பங்கள்

    இசை ஆல்பங்கள்

    டேஞ்சரஸ், ஆஃப் தி வால், திரில்லர், பேட், எஸ்கேப், இன்வின்சிபிள், பென், இம்மோர்டல், ஃபாரெவர் மைக்கேல், மியூசிக் அண்ட் மி, ஒன் நைட் இன் ஜப்பான், ஆக்லாண்ட் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட இசை ஆல்பங்களை வெளியிட்டு, மியூசிக் உலகின் முடிசூடா மன்னராக திகழ்ந்தார் மைக்கேல் ஜாக்சன்.

    என்றும் நினைவில்

    என்றும் நினைவில்

    பத்துக்கும் மேற்பட்ட கிராமி விருதுகள், அமெரிக்கன் மியூசிக் விருது, பிரிட் விருது, எம்மி விருது, எம்.டி.வி விருது, பில்போர்ட் மியூசிக் இருது என இசைத் துறையின் எண்ணில் அடங்காத விருதுகளை வாங்கிக் குவித்த மைக்கேல் ஜாக்சன், இசையும் நடனமும் இருக்கும் வரை மக்களால் நினைக்கப்படுவார்.

    English summary
    On June 25, 2009, entertainment superstar Michael Jackson, known as "the king of pop," a vast influence on the music scene of his day, died of cardiac arrest at age 50 while preparing a comeback.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X