ஓரல் செக்ஸ் குறித்து உளறியதால் டக்ளஸை உதறினார் கேத்தரீன் ஜெட்டா ஜோன்ஸ்!
லாஸ் ஏஞ்சலெஸ்: தான் அதிகஅளவில் வாய்ப்புணர்ச்சியில் ஈடுபட்டதால்தான் தனது தொண்டையில் புற்று நோய் வந்ததாக நடிகர் மைக்கேல் டக்ளஸ் கூறியதால்தான் வெறுப்புற்று அவரிடமிருந்து விலகும் முடிவுக்கு அவரது மனைவியும் நடிகையுமான கேத்தரீன் ஜெட்டா ஜோன்ஸ் வந்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிட்டத்தட்ட 13 ஆண்டு கால குடும்ப வாழ்க்கைக்கு இருவரும் தற்போது குட்பை சொல்லி விட்டனர்.
விவாகரத்து முடிவுக்கு கேத்தரீன்தான் முதலில் வந்ததாக கூறப்படுகிறது. அதற்கு டக்ளஸின் பேச்சுதான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

ஓரல் செக்ஸ்
68 வயதாகும் மைக்கேல் டக்ளஸ் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் தான் அதிக அளவில் ஓரல் செக்ஸில் ஈடுபட்டதாகவும், இதனால்தான் தனக்கு தொண்டையில் புற்றுநோய் வந்ததாகவும் கூறியிரு்நதார்.

டக்ளஸ் பேச்சை ரசிக்கவில்லை கேத்தரீன்
டக்ளஸின் இந்த பகிரங்கப் பேச்சை ரசிக்கவில்லையாம் கேத்தரீன். மேலும், அவர் மீது வெறுப்புற்றாராம். மேலும் டக்ளஸை விவாகரத்து செய்யவும் அவர்தான் முடிவெடுத்தாராம்.

சேரவே முடியாத மோசமான நிலை
டக்ளஸின் பேச்சால் கடும் அதிருப்தி அடைந்து இனியும் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலைக்குப் போய் விட்டாராம் 43 வயதாகும் கேத்தரீன்.

பல மாதங்களுக்கு முன்பே வருத்தம்
ஆனால் இந்த சம்பவத்திற்கு முன்பே, அதாவது பல மாதங்களுக்கு முன்பே இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
இதற்குத்தான் தேவையில்லாமல் வாயை விடக் கூடாது என்கிறார்களோ...!


Click it and Unblock the Notifications











