ஆஸ்கர் 2020: சிறந்த நடிகைக்கான விருதை பெறப்போவது யார்.. நாமினேஷன் லிஸ்ட் இதோ!

சென்னை: ஆஸ்கர் விருது விழாவில் சிறந்த நடிகைக்கான நாமினேஷன் லிஸ்டில் இடம் பெற்றுள்ளவர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அந்நாட்டு நேரப்படி நாளை இரவு நடைபெறுகிறது. இந்திய நேரப்படி நாளை மறுநாள் அதாவது திங்கள் கிழமை காலை 6 மணிக்கு மேல்.

இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்க உலகம் முழுவதும் உள்ள திரை நட்சத்திரங்கள் தயாராகி வருகின்றனர்.

தொகுப்பாளர் இல்லாமல்

தொகுப்பாளர் இல்லாமல்

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கம் விழாக்கோலம் பூண்டுள்ளது. கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தொகுப்பாளர் இல்லாமல் ஆஸ்கர் விருது விழா நடைபெறவுள்ளது. ஆஸ்கர் விருது விழாவின் போது நேரத்தை மிச்சமாக்க தொகுப்பாளர் இல்லாமல் விழாவை நடத்த முடிவு செய்திருப்பாக விருது விழாவின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

நாமினேஷன் லிஸ்ட்

நாமினேஷன் லிஸ்ட்

கடந்த வருடம், ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு ஹாலிவுட் பிரபலம் மேடையில் தோன்றி விருதை அறிவித்தனர். இதனால் தொலைக்காட்சிப் பார்வையாளர்களின் எண்ணிக்கை கூடியது. இதன்காரணமாக அதே மெத்தடை இந்த ஆண்டும் பின்பற்ற நிகழ்ச்சி குழு முடிவு செய்திருக்கிறது. இந்நிலையில் சிறந்த நடிகர், சிறந்த படம், சிறந்த தொழில் நுட்பம் என பல பிரிவுகளில் நாமினேஷன் பட்டியல் வெளியாகி வருகிறது.

சிந்தியா எரிவோ, ரோனன்

சிந்தியா எரிவோ, ரோனன்

இந்நிலையில் ஆஸ்கர் விருது பெறும் சிறந்த நடிகைகளுக்கான நாமினேஷன் பட்டியல் வெளியாகியுள்ளது. அதன்படி பாம்ஷெல் படத்திற்காக சார்லிஸ் தெரான் நாமினேட் செய்யப்பட்டிருக்கிறார். இதேபோல் ஹாரியட் படத்திற்காக சிந்தியா எரிவோ நாமினேட் ஆகியிருக்கிறார். அவரை தொடர்ந்து லிட்டில் வுமன் படத்திற்காக சயோய்ர்ஸ் ரோனன் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார்.

ஐந்து நடிகைகள்

ஐந்து நடிகைகள்

ஜூடி படத்திற்காக ரினீ ஸெல்வெஜர் ஆஸ்கர் விருதுக்கான நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். அவரை தொடர்ந்து மேரேஜ் ஸ்டோரி படத்தில் நடித்த ஸ்கார்லெட் ஜோஹான்சன் ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் ஆகியிருக்கிறார். ஆஸ்கர் விருதுக்கு நாமினேட் ஆகியுள்ள இந்த 5 பேரில் ஸ்கார்லெட் ஜோஹான்சனே ஆஸ்கர் விருதை தட்டிச்செல்வார் என்றும் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X