ஆஸ்கர் விருது நடிகை மேகி ஸ்மித் காலமானார்.. ஹாரி பாட்டர் படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர்!
சென்னை: ஹாலிவுட்டில் பிரபலமான நடிகையாக வலம்வந்த நடிகை டேம் மேகி ஸ்மித் தன்னுடைய 89வது வயதில் காலமாகியுள்ளார். வயது மூப்பு காரணமாக கடந்த சில தினங்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி அவர் காலமானதாக அவரது மகன்கள் மற்றும் பேரன்கள் அறிவித்துள்ளனர்.
ஹாரிபார்ட்டர் படங்களில் இவர் புரொபசராக நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். இவரது இந்த கேரக்டர் ஏராளமான ரசிகர்களுக்கு பிடித்தமான ஒன்றாக அமைந்தது. இவர் கடந்த 1969ம் ஆண்டில் வெளியான தி பிரைம் ஆஃப் மிஸ் ஜீன் பிராடி என்ற படத்தில் நடித்ததன்மூலம் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்.

ஹாலிவுட் நடிகை மேகி ஸ்மித்: ஹாலிவுட்டில் ஹாரிபார்ட்டர் படங்களின் தொடரில் புரொபசராக நடித்து ஏராளமான ரசிகர்களை சர்வதேச அளவில் கவர்ந்தவர் நடிகை டேம் டேகி ஸ்மித். கடந்த 1969ம் ஆண்டில் வெளியான தி பிரைம் ஆஃப் மிஸ் ஜீன் பிராடி என்ற படத்தில் நடித்திருந்த மேகி ஸ்மித்திற்கு சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தன்னுடைய 89வது வயதில் அவர் லண்டனில் வயது மூப்பு காரணமாக காலமானார். இதுகுறித்து அவரது மகன்கள் மற்றும் பேரன்கள் ஆகியோர் அறிக்கை மூலம் அறிவித்துள்ளனர். கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக லண்டனில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மேகி, இன்று காலை சிகிச்சை பலனின்றி காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேகி ஸ்மித் காலமானார்: லண்டனில் தன்னுடைய இரு மகன்கள் மற்றும் 5 பேரன்களுடன் வாழ்ந்து வந்த மேகி, தன்னுடைய சிறப்பான நடிப்பின்மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்ததுடன் அதிகமான விருதுகளையும் வசப்படுத்தியுள்ளார். வயதான காலத்தில் ஹாரி பார்ட்டர் படங்கள் தனக்கு சிறப்பான பென்ஷன் என்று அவர் முன்னதாக நகைச்சுவையுடன் குறிப்பிட்டிருந்தார். தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்த மேகி, இவர் நடித்த ஜீன் பிராடி படம் இவருக்கு மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெற்றுக் கொடுத்தது. ஆஸ்கருடன் பாஃப்தா விருதையும்இநத்ப்படம் பெற்றுக் கொடுத்தது.
ஆஸ்கர் விருது நடிகை: மேலும் கடந்த 1978ம் ஆண்டில் வெளியான கலிபோர்னியா சூட் படத்திற்காக இவருக்கு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் மற்றும் கோல்டன் க்ளோப் விருது வழங்கப்பட்டிருந்தது. டீ வித் முசோலினி படத்திற்காகவும் மேகிக்கு சிறந்த நடிகைக்கான பாஃப்தா விருது வழங்கப்பட்டது. இவ்வாறு தன்னுடைய வீட்டை விருதுகளால் குவித்துள்ள மேகி ஸ்மித், தன்னுடைய 89வது வயதில் காலமாகியுள்ளார். அவரது மறைவு அவரது ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுததியுள்ளது. தொடர்ந்து மேகியின் மறைவிற்கு ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.
மேடை நாடகம் டூ சினிமா: சினிமாவில் நடிப்பதற்கு முன்னதாக மேடை நாடகங்களில் நடித்துவந்த மேகி, தன்னுடன் நடித்த ராபர்ட் ஸ்டீபன்ஸ் என்ற சக நடிகரை கடந்த 1967ம் ஆண்டில் திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு கிறிஸ்டோபர் மற்றும் டோபி என்ற இரு மகன்கள் உள்ள நிலையில், அவருடன் கடந்த 1975ம் ஆண்டில் மேகிக்கு விவாகரத்து ஏற்பட்டது. இதையடுதது அதே ஆண்டில் எழுத்தாளர் பெவர்லி கிராஸ் என்பவரை மேகி திருமணம் செய்துக் கொண்டார். இவர் கடந்த 1998ம் ஆண்டில் உயிரிழந்தார். இதையடுதது தன்னுடைய மகன்கள் மற்றும் பேரன்களுடன் சேர்ந்து வாழ்ந்து வந்தார் மேகி ஸ்மித். இந்நிலையில் இவரது இறுதிச்சடங்கு நாளைய தினம் நடக்கும் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











