twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் கலைஞர் ஹாப்கின்ஸ் விபத்தில் பலி

    By Shankar
    |

    Mike hopkins
    கான்பெரா: கிங்காங் மற்றும் பெல்லோஷிப் ஆப் தி ரிங் போன்ற படங்களுக்காக ஆஸ்கர் விருது பெற்ற மைக் ஹாப்கின்ஸ் விபத்தில் மரணமடைந்தார்.

    மைக் ஹாப்கின்ஸ், லார்டு ஆப்தி ரிங்ஸ் படத்தில் சவுண்ட் எடிட்டராக பணியாற்றினார்.

    நியூசிலாந்து நாட்டை சேர்ந்தவரான அவருக்கு வயது 53. நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவு பகுதியில் உள்ள ஆற்றில் சிறு படகில் பயணம் செய்து கொண்டிருந்தபோது திடீரென மூழ்கி இறந்தார்.

    இவர் கடந்த 2003ம் ஆண்டு வெளியான கிங் காங் மற்றும் 2006ம் ஆண்டு வெளியான பெல்லோஷிப் ஆப் த ரிங்க் ஆகிய படங்களில் பணிபுரிந்ததற்காக ஆஸ்கர் விருது வென்றவர். இந்த விருதினை தன்னுடன் பணியாற்றிய ஈத்தன் வேன் டர் ரைன் என்பவருடன் பகிர்ந்து கொண்டார்.

    'பல புகழ்பெற்ற உலக நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் சினிமா துறை பிரபலங்கள் ஆகியோர் ஹாப்கின்ஸ் உடன் பணியாற்றியுள்ளனர். அவர்கள் மைக்கை இழந்து வாடுவார்கள்,' என்று இயக்குநர் பீட்டர் ஜாக்சன் கூறியுள்ளார்.

    மேலும், மைக் மற்றும் ஈத்தன் ஆகியோர் டிரான்ஸ்பார்மர்ஸ் படத்திற்காக இந்த ஆண்டின் ஆஸ்கர் விருது பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Oscar-winning sound editor Mike Hopkins, 53, who worked on the Lord of the Rings trilogy and other movie blockbusters, has died in a New Zealand rafting accident.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X