ஆஸ்கர் 2020: ரெட் கார்ப்பெட்டில் பாவாடை சட்டை.. ஹை ஹீல்ஸில் நடிகர்.. புஷ் அப்ஸ் செய்த டாம் ஹேங்ஸ்!

Recommended Video

List of all the winners at Oscars 2020 - Video

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகமே ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.

உலகின் சிறந்த சினிமாக்களை கவுரவிக்கும் வகையில் வழங்கப்படும் விருது அமெரிக்காவின் ஆஸ்கர் விருது. ஒவ்வொரு படைப்பாளிக்கும் சினிமாத்துறையை சேர்ந்த கலைஞர்களுக்கும் நம் படம் ஆஸ்கர் விருதை பெற வேண்டும் என்ற கனவு நிச்சயம் இருக்கும்.

அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆஸ்கர் விருதுகள் வழங்கும் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறுவது வழக்கம். அதன்படி 92வது ஆஸ்கர் விருது விழா, லாஸ் ஏஞ்சல்ஸின் டால்பி திரையரங்கில் இன்று நடைபெற்று வருகிறது.

ஒய்யாரம்

ஒய்யாரம்

இதனை முன்னிட்டு நிகழ்ச்சியின் தொடக்கமாக ரெட் கார்ப்பெட் எனப்படும் சிவப்புக் கம்பள வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஹாலிவுட் மட்டுமின்றி உலக சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர். உலகமே கண்டுகளிக்கும் இந்நிகழ்ச்சியில் வித்தியாசமான கண்கவர் உடையில் ஒய்யாரமாக போஸ் கொடுத்து வருகின்றனர் பிரபலங்கள்.

கோட் சூட்டில்

கோட் சூட்டில்

நடிகைகள் மட்டுமின்றி நடிகர்களும் கோட் சூட் மட்டுமின்றி வித்தியாசமான உடைகளில் வலம் வந்து திணறடித்தனர். சிறந்த துணை நடிகருக்கான நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்றுள்ள லியோனார்டோ டி கார்ப்ரியோ மற்றும் பிராட் பிட் ஆகியோர் கறுப்பு நிற கோட் சூட்டில் பங்கேற்றுள்ளனர்.

டாம் ஹேங்ஸ்

டாம் ஹேங்ஸ்

இதேபோல் நடிகர் கீனு ரீவ்ஸ் தனது தாயுடன் ரெட் கார்ப்பெட் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். இவர் டாய் ஸ்டோரி 4 படத்திற்கு டப்பிங் கொடுத்திருக்கிறார். இந்தப் படம் சிறந்த அனிமேஷன் படத்திற்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. எ பியூட்டிஃபுல் டே இன் நெய்பர்ஹுட் படத்திற்காக சிறந்த துணை நடிகராக நாமினேட் செய்யப்பட்டுள்ள நடிகர் டாம் ஹேங்ஸ்.

புஷ் அப்ஸ்

புஷ் அப்ஸ்

இவர் ரெட் கார்ப்பெட்டில் புஷ் அப்ஸ் உடற்பயிற்சி செய்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். இதனை பார்த்த ரசிகர்கள் ஓவென கத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இதேபோல் நடிகை ரெபெல் வில்சன் ஜொலிக்கும் கவுனில் வந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைத்தார். சிறந்த துணை நடிகைக்கான நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ள லாரா டெர்னும் ரெட் கார்ப்பெட் வரவேற்பில் செம ஜாலியாக பங்கேற்றார்.

பெரும் சந்தோஷம்

பெரும் சந்தோஷம்

நாளை 53வது பிறந்த நாளை கொண்டாட உள்ள லாரா டெர்ன், மேரேஜ் ஸ்டோரி படத்திற்காக சிறந்த துணை நடிகை நாமினேஷன் லிஸ்ட்டில் இடம் பெற்றிருக்கிறார். தான் விருது பெற்றாலும் பெறாவிட்டாலும் மகிழ்ச்சிதான். இறுதி வரை நாமினேஷன் லிஸ்ட்டில் இடம்பெற்றிருந்ததே பெரும் சந்தோஷம் என கூறியிருக்கிறார் லாரா டெர்ன்.

பாவாடை சட்டை

பாவாடை சட்டை

இதேபோல் நடிகர் பில்லி போர்ட்டர் பாவாடை சட்டை அணிந்து வித்தியாசமக தோன்றினார். ஆரஞ்ச் நிற பாவாடை, கோல்டன் நிறத்தில் தகதகவென ஜொலிக்கும் உடை அணிந்தும், ஹை ஹீல்ஸ் காலணி அணிந்தும் விநோதமாக தோன்றினார். அவரை சுற்றி சுற்றி போட்டோ எடுத்தனர் போட்டோ கிராபர்கள். தனது வித்தியாசமான உடையால் அனைவரின் கவனத்தையும் பெற்றார் பில்லி போர்ட்டர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X