ஆஸ்கர் 2020: விருது விழா நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸில் பலத்த மழை.. சேறும் சகதியுமான ரெட் கார்ப்பெட்!

Recommended Video

List of all the winners at Oscars 2020 - Video

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் விருது விழா நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மழை வெளுத்து வாங்கியதால் ரெட் கார்ப்பெட் நனைந்தது.

உலகமே பெரும் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி திரையரங்கில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ஹாலிவுட் மட்டுமின்றி உலக சினிமாக்களை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பங்கேற்றுள்ளனர். ஆஸ்கர் விருதின் முக்கிய நிகழ்ச்சியாக பிரபலங்களுக்கு ரெட் கார்ப்பெட் வரவேற்பு அளிப்பது வழக்கம்.

கொட்டி தீர்த்த மழை

அதன்படி நிகழ்ச்சி நடைபெறும் டால்பி திரையரங்கின் நுழைவு வாயில் பகுதியில் அதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பலத்த மழை வெளுத்து வாங்கியது. ரெட் கார்ப்பெட்டுகள் விரிக்கப்பட்ட உடனேயே தனக்குதான் விரிக்கப்பட்டிருக்கிறது என்பதை போல கொட்டித் தீர்த்தது மழை.

நனைந்த ரெட் கார்ப்பெட்

இதனால் ரெட் கார்ப்பெட் நனைந்து சேதமடைந்தது. மழையால் சிவப்பு நிற கார்ப்பெட் சேறும் சகதியுமானது. இதேபோல் டால்பி திரையரங்கின் மேற்கூரை வழியாகவும் விழா மேடைக்கு அருகில் மழை நீர் ஊற்றியது. இதனால் பதறிய பணியாளர்கள் ரோப் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுப்பட்டனர்.

குளம் போல மழை நீர்

நிகழ்ச்சி தொடங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பாக மழை பிய்த்துக் கொண்டு ஊற்றியது. இதனால் சிவப்புக் கம்பளத்தின் மீது பிளாஸ்டிக் கவர்களை போர்த்தி பாதுகாத்தனர் பணியாளர்கள். ஆனாலும் ரெட் கார்ப்பெட் சேதமடைந்தது. அதன் மீது குளம் போல தேங்கியிருந்த தண்ணீரை அப்புறப்படுத்தினர்.

மழையால் புறக்கணிப்பு

பிரம்மாண்டமான சிவப்பு கம்பளம் ஹாலிவுட் பவுல்வர்டு மற்றும் ஹைலேண்ட் அவென்யூவின் கார்னர் பகுதியில் இருந்து விரிக்கப்பட்டிருந்தது. ஆனால் மழையால் பங்கேற்பாளர்கள் சிலர் சிவப்பு கம்பளத்தை புறக்கணித்தனர். தொடர்ந்து மழை பெய்ததால் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நனைந்த கார்ப்பெட்டை மாற்றும் பணியிலும் ஈடுபட்டனர்.

போட்டோ கிராபர்கள் பாதிப்பு

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் லேசான மழை பெய்யும் என அந்நாட்டு வானிலை மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. ஆனால் பலத்த மழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடும் குளிரும் நிலவியது. மழை மற்றும் குளிரால் ஆஸ்கர் 2020 சிவப்புக் கம்பள வரவேற்பு குறித்த செய்திகளை சேகரிக்க சென்ற செய்தியாளர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் பெரும் அவதி அடைந்தனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X