ஆஸ்கர் 2014 .... கடும் போட்டியில் கிராவிட்டி, அமெரிக்கன் ஹஸில்.. தலைக்குப் 10 பரிந்துரை!
லாஸ் ஏஞ்சலெஸ்: ஆஸ்கர் ஜூரம் ஹாலிவுட்டில் கொளுந்து விட்டு எரியத் தொடங்கி விட்டது. 86வது ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதிலிருந்தே விருது பெறுவோர் தேர்வு செய்ய்படவுள்ளனர்.
2014ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலை ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் அகாடமி ஆப் மோசன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் அமைப்பின் தலைவர் செரில் பூன் ஐசக்ஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.
லாஸ் ஏஞ்சலெஸில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர், நடிகை உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளுக்கான பரிந்துரைப் பட்டியல் வெளியிடப்பட்டது.
மார்ச் 2ம் தேதி ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். எல்லென் டி ஜெனரஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவார்.

கிராவிட்டி, அமெரிக்கன் ஹஸில்.. ஆளுக்கு 10
இந்தப் போட்டியில் கிராவிட்டி மற்றும் அமெரிக்கன் ஹஸில் ஆகிய இரு படங்களுக்கும் இடையேதான் செமத்தியான போட்டி உருவெடுத்துள்ளது. இரு படங்களும் தலா 10 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதால் பெரும் ஆர்வம் எழுந்துள்ளது.

முக்கியப் பிரிவுகளில்
இரு படங்களும், சிறந்த படம், சிறந்த இயக்குநர், சிறந்த நடிகை உள்ளிட்ட முக்கியப் பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

9 பிரிவுகளில் 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் போட்டி
இதற்கு அடுத்து அதிக அளவிலான நாமினேஷன்களைப் பெற்றுள்ள படம் 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ். இப்படம் சிறந்த படம், சிறந்த இக்குநர், சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த துணை நடிகை உள்பட 9 பிரிவுகளில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

ஹெர், நெப்ரஸ்கா, கேப்டன் பிலிப்ஸ்
இதேபோல சிறந்த படத்திற்கான பரிந்துரைப் பட்டியலில் கேப்டன் பிலிப்ஸ், டல்லாஸ் பையர்ஸ் கிளப், ஹெர், நெப்ரஸ்கா, பிலோமினா, தி உல்ப் ஆப் வால் ஸ்டிரீட் ஆகிய படங்களும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

ஏமாற்றிய படங்கள்
அதேசமயம், விருது பெறும் என நம்பப்பட்ட பல படங்கள் எந்தப் பிரிவிலும் இடம் பெறாமல் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளன. அதில் முக்கியமானவை சேவிங் மிஸ்டர் பேங்க்ஸ், லீ டேணியல்ஸ், தி பட்லர் ஆகியவை.

ஓப்ராவுக்கும் ஏமாற்றம்
இதில் சேவிங் மிஸ்டர் பேங்க்ஸ் படத்திற்காக, சிறந்த துணை நடிகை விருதுக்கு ஓப்ரா வின்பிரே பரிந்துரைக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் பரிந்துரைக்கப்படவில்லை. விருதுகளுக்குரிய பரிந்துரைகள் பற்றிய ஒரு பார்வை....

சிறந்த படம்
அமெரிக்கன் ஹஸில், கேப்டன் பிலிப்ஸ், டல்லாஸ் பையர்ஸ் கிளப், கிராவிட்டி, ஹெர், நெப்ரஸ்கா, பிலோமினா, 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ், தி உல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட்

சிறந்த நடிகர்
அமெரிக்கன் ஹஸில் நாயகன் கிறிஸ்டியன் பால், நெப்ரஸ்கா நாயகன் ப்ரூஸ் டெர்ன், தி உல்ப் ஆப் வால்ஸ்ட்ரீட் நாயகன் லியானோர்டோ டி காப்ரியோ, 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் நாயகன் சிவெட்டல் ஜோபோர், டல்லாஸ் பையர்ஸ் கிளப் நாயகன் மாத்யூ மெக்கான்னகி.

சிறந்த நடிகை
அமெரிக்கன் ஹஸில் நாயகி அமி ஆடம்ஸ், ப்ளூ ஜாஸ்மின் நாயகி கேட் பிளான்செட், கிராவிட்டி நாயகி சான்ட்ரா புல்லாக், பிலோமினா நாயகி ஜூடி டென்ச், ஆகஸ்ட்-ஓசேஜச் கன்ட்ரி நாயகி மெரிஸ் ஸ்டிரீப்.

சிறந்த துணை நடிகர்
கேப்டன் பிலிப்ஸ் பர்காத் அப்தி, அமெரிக்கன் ஹஸில் பிராட்லி கூப்பர், 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் படத்தின் மைக்கேல் பாஸ்பெண்டர், தி உல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட் படத்தின் ஜோனா ஹில், டல்லாஸ் பையர்ஸ் கிளப் படத்தின் ஜேரெட் லெடோ.

சிறந்த துணை நடிகை
ப்ளூ ஜாஸ்மின் நடிகை சால்லி ஹாக்கின்ஸ், அமெரிக்கன் ஹஸில் நடிகை ஜெனீபர் லாரண்ஸ், 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் படத்தின் லூபிடா நியோங்கோ, ஆகஸ்ட் ஓசேஜ் கன்ட்ரி படத்தின் ஜூலியா ராபர்ட்ஸ், நெப்ரஸ்காவின் ஜூன் ஸ்கியுப்.

சிறந்த இயக்குநர்
அமெரிக்கன் ஹஸில் - டேவி்ட் ஓ ரஸ்ஸல், கிராவிட்டி- அல்போன்சோ குவாரான், நெப்ரஸ்கா- அலெக்சாண்டர் பைன், 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ் - ஸ்டீவ் மெக்வீன், தி உல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட் - மார்ட்டின் ஸ்கோர்சீஸ்.

சிறந்த அனிமேஷன் படம்
தி க்ரூட்ஸ், டெஸ்பிகபிள் மி 2, எர்னட்ஸ் அன்ட் செலஸ்டைன், பிரோசன், தி வின்ட் ரைசஸ்

சிறந்த வெளிநாட்டுப் படம்
தி புரோக்கன் சர்க்கிள் பிரேக் டவுன் -பெல்ஜியம், தி கிரேட் பியூட்டி- இத்தாலி, தி ஹன்ட் - டென்மார்க், தி மிஸ்ஸிங் பிக்சர்- கம்போடியா, ஓமர் - பாலஸ்தீனம்.

சிறந்த டாக்குமென்டரி
தி ஆக்ட் ஆப் கில்லிங், க்யூட்டி அன்ட் தி பாக்ஸர், டர்ட்டி வார்ஸ், தி ஸ்கொயர், டுவென்டி பீட் பிரம் ஸ்டார்டம்.

சிறந்த ஒரிஜினல் திரைக்கதை
அமெரிக்கன் ஹஸில், ப்ளூ ஜாஸ்மின், டல்லாஸ் பையர்ஸ் கிளப், ஹெர், நெப்ரஸ்கா.

சிறந்த அடாப்டட் திரைக்கதை
பிஃபோர் மிட்நைட், கேப்டன் பிலிப்ஸ், பிலோமினா, 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ், தி உல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட்.

சிறந்த ஒரிஜினல் இசை
தி புக் தீப் - ஜான் வில்லியம்ஸ், கிராவிட்டி- ஸ்டீவன் பிரைஸ், ஹெர் - வில்லியம் பட்லர் மற்றும் ஓவென் பாலட், பிலோமினா - அலெச்காண்ட்ரே டெஸ்பிளட், சேவிங் மிஸ்டர் பேங்க்ஸ் - தாமஸ் நியூமன்.

சிறந்த பாடல்
All Yet Not Alone, -டென்னிஸ் ஸ்பீகல், Happy - பாரல் வில்லியம்ஸ், Let It Go - கிறிஸ்டன் ஆண்டர்சன் லோபஸ் மற்றும் ராபர்ட் லோபஸ், The Moon Song - காரன் ஓ,
Ordinary Love - பால் நியூசன், டேவ் இவான்ஸ், ஆடம் கிளேட்டன், லாரி முல்லன்.

சிறந்த எடிட்டிங்
அமெரிக்கன் ஹஸில், கேப்டன் பிலிப்ஸ், டல்லாஸ் பையர்ஸ் கிளப், கிராவிட்டி, 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ்.

சிறந்த ஒளிப்பதிவு
தி கிராண்ட் மாஸ்டர், கிராவிட்டி, இன்சைட் லெயன் டேவிஸ், நெப்ரஸ்கா, பிரிசனர்ஸ்.

சிறந்த தயாரிப்பு வடிமைப்பு
அமெரிக்கன் ஹஸில், கிராவிட்டி, தி கிரேட் காட்ஸ்பி, ஹெர், 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ்.

சிறந்த உடை அலங்கார வடிவமைப்பு
அமெரிக்கன் ஹஸில்ஸ, தி கிராண்ட்மாஸ்டர், தி கிரேட் காட்ஸ்பி, தி இன்விசிபிள் உமன், 12 இயர்ஸ் ஏ ஸ்லேவ்.

சிறந்த மேக்கப் - ஹேர்ஸ்டைல்
டல்லாஸ் பையர்ஸ் கிளப், ஜேக்கஸ் பேட் கிராண்ட்பா, தி லோன் ரேஞ்சர்.

சிறந்த ஒலிப்பதிவு எடிட்டிங்
ஆல் இஸ் லாஸ்ட், கேப்டன் பிலிப்ஸ், கிராவிட்டி, தி ஹாப்பிட், லோன் சர்வைவர்.

சிறந்த ஒலிக் கலவை
கேப்டன் பிலிப்ஸ், கிராவிட்டி, தி ஹாபிட், இன்சைட், லெயன் டேவிஸ், லோன் சர்வைவர்.

சிறந்த விஷூவல் எபக்ட்ஸ்
கிராவிட்டி, தி ஹாபிட், அயர்ன் மேன் 3, தி லோன் ரேஞ்சர், ஸ்டார் டிரக் இன்டூ டார்க்னெஸ்.

சிறந்த லைவ் ஆக்ஷன் ஷார்ட் பிலிம்
அக்வல் நோ எரா யோ, அவென்ட் க்யூ டி டோட் பெர்ட்ரே, ஹீலியம், பிட்டாக்கோ முன் கைக்கி ஹோய்த்தா?, தி வூர்மன் பிராப்ளம்.

சிறந்த அனிமேஷன் ஷார்ட் பிலிம்
பெரல், கெட் ஏ ஹார்ஸ், மிஸ்டர் ஹூப்லட், பொசசன்ஸ், ரூம் ஆன் தி ப்ரூம்.

சிறந்த டாக்குமென்டரி ஷார்ட் பிலிம்
கேவ் டிக்கர், பேசிங் பியர், கராமா ஹேஸ் நோ வால்ஸ், தி லேடி இன் நம்பர் 6 - மியூசிக் சேவ்ட் மை லைப்.


Click it and Unblock the Notifications











