ஆஸ்கார் வென்ற பிரபல நடிகர் வில்லியம் ஹர்ட் காலமானார்

வாஷிங்டன் : ஆஸ்கார் விருது வென்ற பிரபல அமெரிக்க நடிகர் வில்லியம் ஹர்ட் நேற்று காலமானார். அவருக்கு வயது 71. இவரது மறைவிற்கு பிரபலங்கள், ரசிகர்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1970 களில் மேடை நாடகங்களில் நடித்து வந்த வில்லியம் ஹர்ட், 1980 களில் ஆல்டர்ட் ஸ்டேட்ஸ் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். The Big Chill, A History of Violence போன்ற படங்கள் இவர் நடித்ததில் அதிகம் ரசிக்கப்பட்ட படங்களாகும். மார்வெல் படங்களில் ராஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்.

வில்லியன் ஹர்ட்டிற்கு 2018 ம் ஆண்டு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. புற்றுநோய்க்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். 1950 ம் ஆண்டு மார்ச் 20 ம் தேதி வில்லியம் பிறந்தார். இவர் தனது 72வது பிறந்தநாளை கொண்டாட இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் நேற்று காலமாகி உள்ளது குடும்பத்தினரிடமும், ரசிகர்களிடமம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 Oscar winning actor William Hurt dies in the age of 71

வழக்கமான கதாபாத்திரங்கள் இல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கக் கூடியவர் வில்லியம். Gorky Park படத்தில் ரஷ்ய போலீஸ் அதிகாரியாக, Alice படத்தில் வசதியான மனிதராக, Until the End of the World படத்தில் பார்வை திறன் அற்றவர்களுக்கு உதவும் வகையிலான மிஷினை உருவாக்கும் மனிதராகவும் நடித்திருந்தார்.

முதல் படத்திலேயே சையின்டிஸ்ட் ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் வில்லியன்.1985 ம் ஆண்டு Kiss of the Spider Woman என்ற படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருதினை பெற்றார் வில்லியம். Children of a Lesser God, Broadcast News போன்ற படங்களுக்காகவும் தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆஸ்கார் விருதிற்காக பரிந்துரைக்கப்பட்டார் வில்லியம்.

A History of Violence படத்தில் வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே வில்லியம் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் விமர்சகர்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த 10 நிமிடங்களும் ஜாலியாக இவர் நடித்தது அனைவரிடமும் பாராட்டை பெற்றது. நான்கு மார்வெல் படங்களில் வில்லியம் நடித்துள்ளார்.

நடிகை மேரி பெர்த் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு, லண்டன் சென்று மேடை நாடகங்களில் நடித்தார் வில்லியம். பிறகு அவரது விவாகரத்து செய்து விட்டு நியூயார்க்கிற்கே திரும்பி வந்தார். 1980 களில் பாலட் டான்சரான சாண்டிரா ஜென்னிங்ஸ் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். வில்லியமிற்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X