twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கருப்பின மக்களின் துயரத்தை டைம் லூப் பாணியில் பேசிய படம்... ஆஸ்கார் வென்று அசத்தல்

    |

    நியூயார்க் : கருப்பின மக்களின் துயரை வித்தியாசமான திரைக்கதையுடன் படமாக்கியிருந்தது டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ் குறும்படம்.

    இந்த படம் சிறந்த குறும்படத்திற்கான ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றது.

    என்ன சொல்றீங்க.. ஒவ்வொரு சீசனில் இருந்தும் 4 பேரு வராங்களா? பிக் பாஸ் ஒடிடி பராக்!என்ன சொல்றீங்க.. ஒவ்வொரு சீசனில் இருந்தும் 4 பேரு வராங்களா? பிக் பாஸ் ஒடிடி பராக்!

    25 முதல் 30 நிமிடங்கள் ஓடக்கூடிய கறுப்பின மக்களின் துயரங்களை சொல்லும் இந்த குறும்படம் தற்போது நெட்பிளிக்சில் காணக் கிடைக்கிறது.

    கறுப்பினத்தவர்களுக்கு எதிரான போக்கு

    கறுப்பினத்தவர்களுக்கு எதிரான போக்கு

    அமெரிக்காவில் கறுப்பினத்தவர்களுக்கு எதிரான போக்கு இன்னும் காணப்படுவதற்கு சமீபத்திய உதாரணங்கள் அதிகமாக உள்ளன. அதில் முக்கியமானது ஜார்ஜ் பிளாய்டின் மரணம். அதற்கான நீதி பெறப்பட்ட போதிலும் நிறவெறி போக்கு அங்கு தொடர்ந்து வருவதாகவே உள்ளது.

    ஆஸ்கார் வென்ற குறும்படம்

    ஆஸ்கார் வென்ற குறும்படம்

    இந்நிலையில் கருப்பின மக்களின் துயரங்களை சொல்லும் வகையில் வெளியாகி ஆஸ்கார் விருதை அள்ளியுள்ள டூ டிஸ்டண்ட் ஸ்ட்ரேஞ்சர்ஸ் அனைவரையும் கவர்ந்துள்ளது. மிகவும் சிறப்பான திரைக்கதையுடன் காணப்படும் இந்த குறும்படம் அனைவரின் பாராட்டிற்கும் உள்ளாகியுள்ளது.

    நெட்பிளிக்சில் காணலாம்

    நெட்பிளிக்சில் காணலாம்

    இந்தப் படம் தற்போது நெட்பிளிக்சில் காணக்கிடைக்கிறது. சிறந்த குறும்படத்திற்கான பிரிவில் ஆஸ்கர் வென்றதுடன் லைக் ஆக்ஷன் கேட்டகரியிலும் இந்த குறும்படத்திற்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜேம்ஸ் பாய்சர். படத்தை ட்ராவோன் ப்ரீ மற்றும் மார்ட்டின் டெஸ்மோன்ட் இருவரும் இணைந்து இயக்கியுள்ளனர்.

    3 கேரக்டர்கள் பிரதானம்

    3 கேரக்டர்கள் பிரதானம்

    மொத்தமாக 3 கேரக்டர்களை மட்டுமே வைத்துக் கொண்டு சிறப்பான குறும்படத்தை இயக்குநர்கள் உருவாக்கியுள்ளனர். சமீபத்தில் தமிழில் டைம் லூப் பாணியில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்துள்ள மாநாடு படத்தை போலவே இந்தப் படமும் உருவாக்கப்பட்டுள்ளது.

    டைம் லூப் பாணியில் குறும்படம்

    டைம் லூப் பாணியில் குறும்படம்

    இந்த டைம் லூப்பை மையமாக வைத்துக் கொண்டு குறைந்த நேரத்தில் கருப்பினத்திற்கு எதிரான இனவெறி என்ற முக்கியமான விஷயத்தையும் ரசிக்கும் வகையில் கொடுத்துள்ள இயக்குநர்களின் முயற்சிக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது.

     சிறப்பான திரைக்கதை

    சிறப்பான திரைக்கதை

    படத்தின் ஹீரோ, ஹீரோயின் மற்றும் ஹீரோவை சுடும் போலீஸ்காரர் ஒரு நாய் இவர்களை சுற்றியே இந்த குறும்படத்தின் கதை பின்னப்பட்டிருக்கும். போலீஸ்காரர் கறுப்பின ஹீரோவை எத்தனை முறை சுடுகிறார் என்பது தெரியாமல் சிறப்பான திரைக்கதை இந்த குறும்படத்தில் கையாளப்பட்டுள்ளது.

    நாயுடன் பாசப்பிணைப்பு

    மேலும் ஹீரோ மற்றும் நாய்க்கு இடையிலான பாசப்பிணைப்பு, போலீஸ்காரருடன் ஹீரோ மேற்கொள்ளும் உரையாடல்கள் என அனைத்தையும் இயக்குநர்கள் யோசித்து காட்சிப்படுத்தியுள்ளனர். இந்த ஆஸ்கார் விருதை மேடையில் பெற்ற போது அவர்கள் பேசியவையும் மிகுந்த கவனத்திற்கு உள்ளாகியுள்ளது.

    ஆஸ்கார் மேடையில் பேச்சு

    ஆஸ்கார் மேடையில் பேச்சு

    இந்த காலகட்டத்திலும் இனவெறிக்கு எதிராக உயிர்கள் பலியாவது நடந்துக் கொண்டுதான் இருக்கிறது என்றும் அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் அவர்கள் ஆத்மார்த்தமாக பேசியது அனைவரின் காதுகளிலும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது.

    English summary
    Time loop Oscar winning short film Two distant strangers
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X