நம்ம ஊரு 'பண்ணையாரும் பத்மினியும்' போல.. ஆஸ்டன் மார்ட்டீனும் ஜேம்ஸ் பாண்டும்.. நீடிக்கும் பந்தம்!
லண்டன்: ஆஸ்டன் மார்ட்டின் காருக்கும் ஜேம்ஸ் பாண்ட் படத்திற்குமான உறவு கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.
Recommended Video
பிரிட்டிஷ் ரகசிய உளவாளியான 007 ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
1953ஆம் ஆண்டு லான் ஃபிளமிங் எழுதிய நாவலை அடிப்படையாக கொண்டு ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரம் உருவாக்கப்பட்டது.

ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸ்கள்
முதல் முறையாக ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி Dr. No திரைப்படம் வெளியானது. இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து அந்த கதாப்பாத்திரத்தை மையப்படுத்தி இதுவரை ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸில் 25 படங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

நோ டைம் டூ டை
25வது படமாக நோ டைம் டூ டை படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை கேரி ஜோஜி இயக்கியுள்ளார். நோ டைம் டூ டை படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகரான டேனியல் க்ரேக், ஜேம்ஸ் பாண்ட் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் கடந்த செவ்வாய்க் கிழமை லண்டனில் உள்ள ராயல் ஆல்பர்ட் ஹாலில் ரிலீஸ் செய்யப்பட்டது

ஆஸ்டன் மார்ட்டின்
நோ டைம் டூ டை திரைப்படம் 30 ஆம் தேதியான நேற்று பிரிட்டனில் ரிலீஸ் செய்யப்பட்டது. அக்டோபர் 8ஆம் தேதி அமெரிக்காவிலும் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்தியாவிலும் இப்படம் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜேம்ஸ் பாண்ட் பட சீரிஸ்களில் ஆஸ்டன் மார்ட்டின் கார் தொடர்புடையதாக இருந்து வருகிறது.

கோல்டு ஃபிங்கர் படம்
பிரிட்டனின் சொகுசு கார் நிறுவனங்களில் ஒன்றான ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனம், 1964ஆம் ஆண்டு வெளியான கோல்டு ஃபிங்கர் படத்தில் ஆஸ்டன் மார்ட்டின் DB5 மாடல் கார் பயன்படுத்தப்பட்டிருக்கும். இந்த மாடல் கார் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் தான் முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது.

தண்டர்பால் திரைப்படம்
இதேபோல் 1965 ஆம் ஆண்டு வெளியான தண்டர்பால் படத்திலும் ஆஸ்டன் மார்ட்டின் DB5 மாடல் கார் பயன்படுத்தப்பட்டது. இதேபோல் 1969ஆம் ஆண்டு வெளியான On Her Majesty's Secret Service படத்திலும் ஆஸ்டன் மார்ட்டின் கார் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அப்போது ஆஸ்டன் மார்ட்டின் DBS என்ற புதிய மாடல் அறிமுகப்படுத்தப்பட்டது.

லிவிங் டே லைட்ஸ் புதிய மாடல்
அதன்பிறகு 1987 ஆம் ஆண்டு வெளியான The Living Daylights படத்தில் ஆஸ்டன் மார்ட்டின் கார் பயன்படுத்தப்பட்டது. Aston Martin V8 Vantage Volante மாடல் கார் 1977ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் 1987ஆம் ஆண்டுதான் பயன்படுத்தப்பட்டது.

டுமாரோ நெவர் டைஸ்
இதேபோல் 1995ஆம் ஆண்டு வெளியான கோல்டன் ஐ படத்திலும் ஆஸ்டன் மார்ட்டின் கார் பயன்படுத்தப்பட்டது. அந்தப் படத்தில் பழைய மாடல் காரான, Aston Martin DB5 கார்தான் பயன்படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து 1997ஆம் ஆண்டு வெளியான Tomorrow Never Dies திரைப்படம் மற்றும் 1999ஆம் ஆண்டு வெளியான The World Is Not Enough திரைப்படத்திலும் Aston Martin DB5 கார்தான் பயன்படுத்தப்பட்டிருந்தது.

டை அனதர் டே
2002ஆம் ஆண்டு வெளியான Die Another Day படத்தில் ஆஸ்டன் மார்ட்டினின் விலையுயர்ந்த சொகுசு காரான Aston Martin V12 Vanquish மாடல் கார் பயன்படுத்தப்பட்டது. இந்த லக்ஸரி கார் 2001ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

கேஸினோ ராயல்
2006ஆம் ஆண்டு வெளியான Casino Royale படத்தில் ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் இரண்டு கார்கள் பயன்படுத்தப்பட்டன. அதன் படி பழைய மாடல் காரான Aston Martin DB5 மற்றும் Aston Martin DBS V12 ஆகிய கார்கள் பயன்படுத்தப்பட்டிருந்தன.

குவாண்டம் ஆஃப் சோலஸ்
2008ஆம் ஆண்டு வெளியான Quantum of Solace படத்தில் சொகுசு காரான Aston Martin DBS V12 கார் பயன்படுத்தப்பட்டது. 2013ஆம் ஆண்டு வெளியான Skyfall படத்தில் Aston Martin DB5 கார் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. 2015ஆம் ஆண்டு வெளியான Spectre படத்தில் Aston Martin DB10 மற்றும் Aston Martin DB5 ஆகிய கார்கள் பயன்படுத்தப்பட்டன.

டேனியல் க்ரேக்கின் படங்கள்
நடிகர் சியோன் கான்னெரி ஜேம்ஸ் பாண்ட்டாக அறிமுகமான காலத்தில் இருந்தே ஆஸ்டன் மார்ட்டின் நிறுவனம் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஜேம்ஸ் பாண்ட் படத்துடன் நீண்ட பந்தத்தை கொண்டுள்ளது. ஜேம்ஸ் பாண்ட் சீரிஸின் கடைசி 5 படங்களான கேஸினோ ராயலே, குவாண்டம் ஆஃப் சோலஸ், ஸ்கைஃபால், ஸ்பெக்ட்டர் ஆகிய படங்களில் ஆஸ்தானமாக ஆஸ்டன் மார்ட்டின் நிறுவன கார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. தற்போது நோ டைம் டூ டை படத்திலும் ஆஸ்டன் மார்ட்டின் நிறுவன கார்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











