இது 4 வது கல்யாணமாம்.. தனது பாடிகார்டை ரகசிய திருமணம் செய்துகொண்ட பிரபல நடிகை!

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல நடிகை, தனது பாடிகார்டை ரகசியமாகத் திருமணம் செய்து கொண்டார் என்று செய்திகள் வெளியாகி உள்ளன.

பிரபல ஹாலிவுட் நடிகை, பமீலா ஆண்டர்சன். பேவாட்ச் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

இவர், இசைக் கலைஞர் டோமி லீ என்பவரை கடந்த 1995 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார்.

காதல் கசந்தது

காதல் கசந்தது

பின்னர் இருவருக்குமான காதல் கசந்தது. 1998 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அடுத்து கடந்த 2006 ஆம் ஆண்டு கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்தார். இந்த திருமணமும் நிலைக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின்னர் ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மீண்டும் திருமணம்

மீண்டும் திருமணம்

அடுத்த வருடமே அவரையும் பிரிந்தார் பமீலா. பிறகு என்ன நினைத்தார்களோ, 2014 ஆம் ஆண்டு மீண்டும் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். அதுவும் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை. அடுத்து 'பேட்மேன்' உட்பட பல படங்களைத் தயாரித்த ஜான் பீட்டர்ஸை (வயது 74) காதலித்து வந்தார்.

டேட்டிங் சென்றனர்

டேட்டிங் சென்றனர்

இந்நிலையில், அவரை முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாயின. கலிஃபோர்னியாவில் உள்ள மாலிபுவில் இவர்கள் திருமணம் நடந்துள்ளது. இருவரும் முப்பது வருடத்துக்கு முன் முதன்முறையாக, டேட்டிங் சென்றனர் என்றும் இப்போது திருமணம் செய்துகொண்டனர் என்றும் கூறப்பட்டது.

5 திருமணமா?

5 திருமணமா?

பிறகு அவரையும் பிரிந்தார் பமீலா. அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில், நான் எங்கே ஐந்து பேரை திருமணம் செய்துகொண்டதாக கூறுகிறார்கள். டோமி லீ, கிட் ராக், ரிக் சாலமன் ஆகியோரை மட்டுமே திருமணம் செய்தேன் என்றும் ஜான் பீட்டர்ஸை திருமணம் செய்துகொள்ளவில்லை. இது அதிகம் என்றாலும் ஐந்தை விட குறைவானதுதான் என்று கூறி இருந்தார்.

ரகசிய திருமணம்

ரகசிய திருமணம்

அதோடு இன்னொரு திருமணம் செய்துகொள்ள ஆசை இருப்பதாகக் கூறியிருந்தார், இந்த 53 வயது நடிகை. இதற்கிடையே அவர் தனது பாடிகார்ட், டான் ஹேஹர்ஸ்ட் (Dan Hayhurst) என்பவரை ரகசியமாக திருமணம் செய்துள்ளார். பிரிட்டீஷ் கொலம்பியாவில் உள்ள வான்கூவர் தீவில் உள்ள அவர் வீட்டில் இந்த திருமணம் நடந்துள்ளது. இதில் நெருங்கிய நண்பர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X