5 கல்யாணம் பண்ணினேனா.? மூனுதானே? இன்னும் ஒரு முறை, பிளீஸ் கடவுளே.. திருமண ஆசையில் பிரபல நடிகை!
கலிபோர்னியா: இன்னும் ஒருமுறை, ஒரே ஒரு முறை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று பிரபல ஹாலிவுட் நடிகை கூறியுள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகை, பமீலா ஆண்டர்சன். பேவாட்ச் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், இசைக் கலைஞர் டோமி லீ என்பவரை கடந்த 1995 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார்.
1998 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அடுத்து கடந்த 2006 ஆம் ஆண்டு கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்தார்.

விவாகரத்து
இந்த திருமணமும் நிலைக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின்னர் ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடமே பிரிந்தனர். பிறகு என்ன நினைத்தார்களோ, 2014 ஆம் ஆண்டு மீண்டும் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். அதுவும் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை,

தயாரிப்பாளர்
அடுத்து 'பேட்மேன்' உட்பட பல படங்களைத் தயாரித்த ஜான் பீட்டர்ஸை (வயது 74) காதலித்து வந்தார். இந்நிலையில் அவரை முறைப்படி திருமணம் செய்து கொண்டதாக கடந்த சில மாதங்களுக்கு முன் செய்திகள் வெளியாயின. கலிஃபோர்னியாவில் உள்ள மாலிபுவில் இவர்கள் திருமணம் நடந்துள்ளது.

ஹாலிவுட்
இருவரும் முப்பது வருடத்துக்கு முன் முதன்முறையாக, டேட்டிங் சென்றனர் என்றும் இப்போது திருமணம் செய்துகொண்டனர் என்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்து இருந்தனர். தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸ், ஹாலிவுட்டில் ஹேர் ஸ்டைலிஸ்டாக வாழ்க்கையை தொடங்கியவர்.

திருமணம்
இந்நிலையில் இவரையும் பிரிந்துவிட்டார் பமீலா. அவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், நான் எங்கே ஐந்து பேரை திருமணம் செய்தேன்? டோமி லீ, கிட் ராக், ரிக் சாலமன் ஆகியோரை மட்டுமே திருமணம் செய்தேன் என்றும் ஜான் பீட்டர்ஸை திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
Recommended Video

இன்னும் ஒரு முறை
இது அதிகம் என்றாலும் ஐந்தை விட குறைவானதுதான் என்று கூறியுள்ளார். அவர் மேலும் கூறும்போது, ஜான் பீட்டருடன் நான் ரொமான்டிக்கில் இருந்தேன். திருமணம் வரை செல்லவில்லை. இன்னும் ஒரே ஒரு முறை திருமணம் செய்துகொள்ள வேண்டும். கடவுளே பிளீஸ், இன்னும் ஒரு முறை, ஒரே ஒரு முறை' என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











