30 வருஷத்துக்கு முன்னால முதல் டேட்டிங்... 5 முறையாக பமீலா கல்யாணம்... 74 வயது தயாரிப்பாளர் ஹேப்பி

By

கலிபோர்னியா: பிரபல ஹாலிவுட் நடிகை பமீலா ஆண்டர்சன் ஐந்தாவது முறையாக திருமணம் செய்துள்ளார்.

பிரபல ஹாலிவுட் நடிகை, பமீலா ஆண்டர்சன். பேவாட்ச் உட்பட பல்வேறு படங்களில் நடித்துள்ள இவர், இசைக் கலைஞர் டோமி லீ என்பவரை கடந்த 1995 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்தார்.

1998 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அடுத்து கடந்த 2006 ஆம் ஆண்டு கிட் ராக் என்ற பாடகரை காதலித்து திருமணம் செய்தார்.

நிலைக்கவில்லை

நிலைக்கவில்லை

இந்த திருமணமும் நிலைக்கவில்லை. 2007 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். பின்னர் ரிக் சாலமன் என்ற விளையாட்டு வீரரை அதே ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அடுத்த வருடமே பிரிந்தனர். பிறகு என்ன நினைத்தார்களோ, 2014 ஆம் ஆண்டு மீண்டும் இவர்கள் திருமணம் செய்துகொண்டனர். அதுவும் ஒரு வருடம் கூட நிலைக்கவில்லை,

தயாரிப்பாளர்

தயாரிப்பாளர்

அடுத்து 'பேட்மேன்' உட்பட பல படங்களைத் தயாரித்த ஜான் பீட்டர்ஸை (வயது 74) காதலித்து வந்தார். இந்நிலையில் அவரை முறைப்படி திருமணம் செய்துள்ளார் ஆண்டர்சன். கலிஃபோர்னியாவில் உள்ள மாலிபுவில் இவர்கள் திருமணம் கடந்த திங்கட்கிழமை எளிமையாக நடந்துள்ளது.

30 வருடத்துக்கு முன்

30 வருடத்துக்கு முன்

பமீலாவும் ஜான் பீட்டரும் முப்பது வருடத்துக்கு முன் முதன்முறையாக, டேட்டிங் சென்றனர். இப்போது திருமணம் செய்துகொண்டனர் என்று அவர்களுக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர் ஜான் பீட்டர்ஸ், ஹாலிவுட்டில் ஹேர் ஸ்டைலிஸ்டாக வாழ்க்கையை தொடங்கியவர்.

Recommended Video

MOST UNDERRATED MUSIC DIRECTORS IN TAMIL CINEMA | FILMIBEAT TAMIL
ஒப்பிடமுடியாதது

ஒப்பிடமுடியாதது

இந்த திருமணம் பற்றி பமீலா ஆண்டர்சன் கூறும்போது, நாங்கள் ஒருவரையொருவர் நன்றாக புரிந்து வைத்துள்ளோம். எங்கள் காதல் ஒப்பிடமுடியாதது என்று தெரிவித்துள்ளார். புதிதாக திருமணம் செய்துகொண்ட இந்த ஜோடிக்கு ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X