இறந்து போன அப்பாவின் பிறந்த நாள்.. ஐ லவ் யூ டாடி என உருக்கமாக வாழ்த்து கூறிய பிரபல நடிகரின் மகள்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: மறைந்த ஹாலிவுட் நடிகர் பால் வாக்கரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மகள் மீடோ வாக்கர் உருக்கமாக பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரபல ஹாலிவுட் நடிகர் பால் வாக்கர். அவ்வளவு எளிதாக பால் வாக்கரை ஹாலிவுட் பட ரசிகர்கள் மறந்து விட முடியாது.
ஹாலிவுட் சினிமாவில் மான்ஸ்டர் இன் த குலோசட் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் பால் வாக்கர். தொடர்ந்து ஃபாஸ்ம் அண்ட் ஃப்யூரியஸ் படத்தில் நடித்து வெற்றி நாயகனாக வலம் வந்தார்.

ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் சீரிஸ்
நீல நிற கண்கள், மெல்லிய தேகம் என க்யூட்டான சாக்லேட் பாயாக வலம் வந்த பால் வாக்கர் உலகம் முழுவதும் ரசிகர்களை கொண்டிருந்தார். ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் பட சீரிஸில் பிரியன் ஓ கான்னர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரும் புகழ் பெற்றார் பால் வாக்கர்.

கார் விபத்தில் சிக்கி மரணம்
கார் ஓட்டுவதில் வல்லவரான பால் வாக்கர், 2013ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி கார் விபத்தில் சிக்கி மரணமடைந்தார். பால் வாக்கர் இறப்பதற்கு முன்பு ஃபாஸ்ட் அண்ட் ப்யூரியஸ் 7வது பாகத்தில் நடித்திருந்தார் பால் வாக்கர்.

48 வது பிறந்தநாள்
இந்த திரைப்படம் 2015 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மறைந்த நடிகர் பால் வாக்கரின் 48 வது பிறந்த நாள் கடந்த ஞாயிற்றுக் கிழமை அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு சமூக வலைதளங்களில் பால் வாக்கரின் ரசிகர்கள் அவருக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

ஐ லவ் யூ டாடி
அந்த வகையில் பால் வாக்கரின் மகளான மீடோ வாக்கரும் தனது தந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்து பதிவிட்டு மரியாதை செலுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது இன்ஸ்டா பக்கத்தில் தனது தந்தையுடன் சிறு குழந்தையாக இருந்த போது எடுக்கப்பட்ட போட்டோவை ஷேர் செய்துள்ள மீடோ வாக்கர், 'Happy birthday daddy, I love you.' என பதிவிட்டுள்ளார்.

மாடலிங் துறையில் பிரபலம்
அவரது இந்த பதிவை 6 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 22 வயதான மீடோ வாக்கர் மாடலிங் துறையில் பிரபலமாக வலம் வருகிறார். சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது அப்பாவுக்கு மரியாதை செலுத்தி வருகிறார் மீடோ வாக்கர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











