பெருசு பட நாயகிக்கு அடித்த பெரிய ஜாக்பாட்.. டாம் க்ரூஸ் உடன் கட்டிப்பிடித்து.. வேறலெவல் வீடியோ!

லண்டன்: சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் சினிமாவில் நடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், வடிவுக்கரசி உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஆனால், சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சரான நிஹாரிகா தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவது மட்டுமின்றி தற்போது ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் உடன் எடுத்துக் கொண்ட வீடியோவை ஷேர் செய்து பலரையும் பொறாமையில் ஆழ்த்தியுள்ளார்.

மிஷன் இம்பாசிபிள் வரிசை படங்கள் மூலமாக உலகளவில் பல கோடி ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ள டாம் க்ரூஸ் நடித்துள்ள மிஷன் இம்பாசிபிள் ஃபைனல் ரெக்கனிங் திரைப்படம் மே 17ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Perusu and Idhayam Murali Actress Niharika spends a life time settlement moment with Tom Cruise

அந்த படத்தின் புரமோஷனில் கலந்துக் கொண்ட பெருசு பட நடிகை நிஹாரிகாவுக்கு ட்ரீம் கம் ட்ரூ மொமண்ட் நடந்துள்ள நிலையில், அதனை அழகாக வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் நிஹாரிகா.

சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்: சியான் விக்ரம், ஏ.ஆர். ரஹ்மான், நாக சைதன்யா, ரன்பீர் கபூர் என பான் இந்தியா அளவில் அனைத்து பிரபலங்களுடன் புரமோஷன்களில் நிஹாரிகா ஈடுபட்டு பிரபலமடைந்தார். சோஷியல் மீடியா இன்ஃப்ளூயன்சரான நிஹாரிகாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 3.4 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்கின்றனர். அவரது வித்தியாசமான விளம்பரங்கள் பிரபலங்களுக்கு பிடித்துப் போன நிலையில், பலரும் அவருடன் இணைந்து புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

பெருசு, இதயம் முரளி: இளங்கோ ராமநாதன் இயக்கத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 14ம் தேதி வெளியான பெருசு படத்தில் வைபவ் மனைவியாக நடித்து சினிமாவில் ஹீரோயினாக மாறினார் நிஹாரிகா. மேலும், அதர்வா முரளி, கயாடு லோஹர், தமன் நடிப்பில் உருவாகியுள்ள இதயம் முரளி படத்திலும் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்கத் தொடங்கியுள்ள நிஹாரிகாவுக்கு இன்று ட்ரீம் கம் ட்ரூ மொமண்ட் நிறைவேறியுள்ளது.

டாம் க்ரூஸ் உடன் நிஹாரிகா: மிஷன் இம்பாசிபிள் ஃபைனல் ரெக்கனிங் படத்தை இங்கிலாந்தில் புரமோட் செய்து வரும் நடிகர் டாம் க்ரூஸை காண கிளம்பிச் சென்ற நிஹாரிகாவின் கைகளை பிடித்துக் கொண்டு விமானம் போன்ற செட் அமைப்புக்கு கீழே அவரை ஹக் செய்து டாம் க்ரூஸ் பேசும் வீடியோவை சற்றுமுன் நிஹாரிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு பல ரசிகர்களை மட்டுமின்றி பல இந்திய நடிகைகளையே பொறாமையில் ஆழ்த்திவிட்டார்.

கிரண் கேட்ட கேள்வி: வில்லன், ஜெமினி, வின்னர் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை கிரண், டாம் க்ரூஸ் உடன் நிஹாரிகாவை பார்த்த நிலையில், நிஜமாவே அவர் தானா? என்கிற கேள்வியை கமெண்ட் பக்கத்தில் எழுப்பியுள்ளார். நடிகை ஸ்ரீலீலா "ஹுஃப் பார்பி" என நிஹாரிகாவின் அழகை வர்ணித்து கமெண்ட் போட்டுள்ளார்.

பிரம்மாண்ட ரிலீஸ்: கிறிஸ்டோபர் மெக்குவாரி இயக்கத்தில் டாம் க்ரூஸ், ஹெய்லே ஆட்வெல், எஸாய் மொரேல்ஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள மிஷன் இம்பாசிபிள் படத்தின் கடைசி பாகம் என சொல்லப்படும் மிஷன் இம்பாசிபிள் வரிசையின் 8வது படமான மிஷன் இம்பாசிபிள் ஃபைனல் ரெக்கனிங் திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. கடந்த பாகமான டெட் ரெக்கனிங் படத்தின் தொடர்ச்சி தான் இந்த பாகம். ஏஐ தான் மெயின் வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X