twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மறைந்த நடிகர் ஹாஃப்மேன் வீட்டில் 70 பாக்கெட் ஹெராயின்!!

    By Shankar
    |

    நியூயார்க்: அளவுக்கதிகமான போதையில் மரணமடைந்த ஹாலிவுட் நடிகர் பிலிப் சீமோர் ஹாஃமேன் வீட்டில் 70 போதைப் பொருள் ஹெராயின் பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் சீமோர் ஹாப்மேன் (46). இவர் 'மிஷன் இம்பாசிபில்-3', 'போகி நைட்ஸ்', 'பிக் லெபோஸ்கி' உள்ளிட்ட பல மெகா ஹிட் படங்களில் நடித்துள்ளார்.

    Philip Seymour Hoffman: '70 bags of heroin' in dead actor's home

    ஆஸ்கர் உள்ளிட்ட பல விருதுகளை வென்றவர். மொத்தம் 51 படங்களில் நடித்துள்ளார்.

    இவர் அமெரிக்காவில் நியூயார்க் அருகேயுள்ள மன்ஹாட்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கியிருந்தார். இவருக்கு மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். போதை மருந்து பழக்கத்துக்கு அடிமையாக இருந்தார். அதற்காக தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருந்தும் அதில் இருந்து அவரால் மீள முடியவில்லை.

    நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் மன்ஹாட்டனில் உள்ள தனது வீட்டின் குளியலறையில் ஹாபஃமேன் பிணமாகக் கிடந்தார். அப்போது அவர் வீட்டில் வேறு யாருமில்லை. அவரது கையில் போதை மருந்து ஏற்றி குத்தப்பட்ட நிலையில் ஊசி இருந்தது.

    எனவே அவர் அளவுக்கு அதிகமாக போதை மருந்து எடுத்துக் கொண்டதால் மரணம் அடைந்திருக்கலாம் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

    அவரது பிரேதத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் ஹாப்மேனின் படுக்கையறையை சோதனையிட்டனர். இந்த சோதனையின் போது ஹாப்மேன் மறைத்து வைத்திருந்த 65 பாக்கெட் ஹெராயின் கைப்பற்றப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    அவரது உடல் நேற்று பிரேதபரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் முடிவுகள் இன்னும் தெரிவிக்கப்படவில்லை. கூடுதல் சோதனைகள் மேற்கொண்ட பிறகே அறிவிக்கப்படும் என நியூயார்க் நகர மருத்துவ பரிசோதனை அதிகாரி ஜூலியா போல்சர் அறிவித்துள்ளார்.

    English summary
    New York City police have found up to 70 bags of suspected heroin inside actor Philip Seymour Hoffman's home a day after his death, US media report.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X