திடீர் உடல் நலக்குறைவு.. பிரபல ஹாலிவுட் நடிகை மரியான் ராம்ஸி காலமானார்.. திரையுலகம் இரங்கல்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகை மரியான் ராம்ஸி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
பிரபல ஹாலிவுட் நடிகை மரியான் ராம்ஸி (Marion Ramsey). ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார்.
கீப் ஆன் டிரெக்கிங், த ஜெபர்சன்ஸ், ஃபேமிலி சீக்ரட்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

போலீஸ் அகாடமி
ஹக் வில்சன் இயக்கிய, அமெரிக்க காமெடி படமான 'போலீஸ் அகாடமி'யில் போலீஸ் அதிகாரி, லாவர்ன் ஹூக்ஸ் என்ற கேரக்டரில் இவர் நடித்திருந்தார். இதில் அவர் நடிப்பு கவனிக்கப்பட்டதை அடுத்து, போலீஸ் அகாடமி படங்களின் அடுத்தடுத்த சீரிஸ்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.

வென் ஐ சிங்
மொத்தம் வெளியான, ஆறு சீரிஸ்களிலும் அவர், அமைதியான அதிகாரம் கொண்ட கேரக்டரில் நடித்தார். பல்வேறு படங்கள் மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வந்த மரியான் ராம்ஸி, கடைசியாக வென் ஐ சிங் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம், கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியானது.

சிகிச்சை பெற்றார்
பாடகியாகவும் பாடலாசிரியராகவும் இருந்த இவர், அதற்கு பிறகு உடல் நிலையை கருத்தில் கொண்டு நடிக்காமல் இருந்தார். இந்நிலையில், உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர் சில நாட்களாக சிகிச்சைப் பெற்று வந்தார். சிகிச்சைப் பலனின்றி, கடந்த வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 73.

திரையுலகினர்
அவர் என்ன காரணத்துக்காக உயிரிழந்தார் என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. அவர் காலமானதை அவருடைய உறவினர்கள் உறுதி செய்துள்ளனர். அவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர். மரியான் ராம்ஸியின் மறைவை அடுத்து ரசிகர்களும் ஹாலிவுட் திரையுலகினரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











