தவறி விழுந்தாரா? தற்கொலை செய்து கொண்டாரா..? ஏரியில் மாயமான பிரபல நடிகையை தேடும் பணி தீவிரம்!
கலிபோர்னியா: ஏரியில் மாயமான நடிகையை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மூன்று நாட்களாகியும் அவரை கண்டுபிடிக்க முடியாதது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரபல ஹாலிவுட் நடிகை நயா ரிவேரா. இவர் த மாஸ்டர் ஆப் டிஸ்கியூஸ், ஃபிரான்கன்ஹூட், க்ளீ, அட் த டெவில் டோர், மேட் ஃபேமிலிஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
டிவி சீரியல்களிலும் நடித்துள்ள இவர், சிறந்த பாடகியும் கூட. பல ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.

காதல் திருமணம்
இவர், நடிகர் ரியான் டோர்சே என்பவரை காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஜோஸி ஹாலிஸ் என்ற மகன் உள்ளார். 2 வருடங்கள் கழித்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்தனர். பின்னர் விவாகரத்து பெற்றனர். லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்த நடிகை ரிவேரா, தனது 4 வயது மகனுடன் பிக்னிக் செல்ல முடிவெடுத்தார்.

திடீரென மாயமானார்
இதையடுத்து கலிபோர்னியாவின் வென்சுராவில் உள்ள பிரு ஏரிக்கு கடந்த புதன்கிழமை சென்றார். அங்கு ஒரு படகை, நண்பகல் ஒரு மணிக்கு வாடகைக்கு அமர்த்தினார். அந்த படகு ஏரியில் சென்றுகொண்டிருந்தது. ஆனால், குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்தப் படகு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ஏரி பராமரிப்பாளர்கள் மற்றொரு படகில் சென்று பார்த்தனர். நடு ஏரியில் அந்தப் படகு இருந்தது. ஆனால், நடிகையை காணவில்லை. மகன் மட்டுமே இருந்துள்ளான்.

ஸ்விம்மிங் சென்றார்
நயா ரிவேராவுக்கான லைஃப் ஜாக்கெட்டும் படகில் அப்படியே இருந்துள்ளது. அவர் மகன் படகில் தூங்கியபடி இருந்துள்ளான். அவன் உடலில் கவச உடை பொருத்தப்பட்டிருந்தது. போலீசார் அவனிடம் விசாரித்தபோது, 'அம்மா ஸ்விம்மிங் சென்றார், திரும்ப வரவில்லை' என்று கூறியதாக தெரிவித்தான். மாயமான நயா ரிவேராவை கடந்த மூன்று நாட்களாகத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

கண்டுபிடிக்க முடியவில்லை
ஹெலிகாப்டர், ட்ரோன், நீச்சல் வீரர்கள் மூலம் அவரை தேடும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இந்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் ஏரிக்குள் விழுந்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்துவிட்டாரா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இனியும் அவர் உயிருடன் இருப்பதற்கான வாய்ப்பு குறைந்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தந்தையிடம் 4 வயது மகன்
இதற்கிடையே நடிகை ஏரியின் அருகே காரில் இறங்கி, தனது மகனுடன் செல்வதும், படகில் மகன் மட்டும் இருப்பது போன்ற புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. அதோடு, ரியாவின் 4 வயது மகன் அவனது தந்தை ரியான் டோர்சேயிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான். தனது செல்ல மகனுடன் ரியான் செல்லும் புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications











