பிரபல ஹாலிவுட் பாடகி 11வது முறையாக கர்ப்பம்… ஷாக்கான ரசிகர்கள் !

அமெரிக்கா : பிரபல ஹாலிவுட் பாடகி கேகே வியாட் 11வது முறையாக கர்ப்பமடைந்துள்ளார்.

இந்த தகவலை தனது சமூகவலைத்தள பக்கத்தில் மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார்.

பாடகியின் இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

கேகே வியாட்

கேகே வியாட்

பாடகி, பாடலாசிரியர், நடிகையான கேகே வியாட் R&B இசைக்குழுக்குழுவில் பங்கேற்று தேசிய அளவில் கவனத்தையும் ஈர்த்தார். சோல் சிஸ்டா, ஹூ நியூ, உட்பட அதிகாரப்பூர்வ ஸ்டுடியோ ஆல்பங்களை வியாட் வெளியிட்டுள்ளார். அண்மையில் அவர் வெளியிட்ட ஆல்பங்கள் அனைத்தும் பில்போர்டில் முதன்மையானதாக உள்ளது.

கணவரை விட்டு பிரிந்தார்

கணவரை விட்டு பிரிந்தார்

பாடகி வியாட் தனது 18வயது வயதில், ரஹ்மத் மோர்டனை மணந்தார். பின்னர் 2009ம் ஆண்டு அவரை விவகாரத்து செய்தார். அவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இதையடுத்து, 2010ம் ஆண்டு மைக்கேல் ஜாமர் ஃபோர்டுடை மறுமணம் செய்து கொண்டார். அவருடன் 7 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த பாடகி வியாட், 8வது முறையாக கர்ப்பமாக இருக்கும் போது மைக்கேல் ஜாமரை விட்டு பிரிந்தார்.

வயிற்றை மருதாணி டாட்டூ

வயிற்றை மருதாணி டாட்டூ

இதையடுத்து, 2018ம் ஆண்டு தனது முன்னாள் காதலரான ஜக்காரியா டேரிங்கை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது பாடகி கேகே வியாட் 11வது குழந்தையை வரவேற்க தயாராக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து maternity photoshoot ஒன்றை நடத்தி உள்ளார். அதில் சிவப்பு நிற கவுன் அணிந்து கொண்டு, போட்டோஷூட்டிற்காக அவர் தனது வயிற்றை மருதாணி டாட்டூவில் அலங்கரித்துள்ளார்.

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

பாடகியின் 11வது கர்ப்பம் குறித்து . அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் பலர், பள்ளியில் உங்கள் குழந்தைகளை பார்த்து யாரும் குழப்பமடைய மாட்டார்களா என்றும், மற்றொருவர், உங்கள் வீட்டிலேயே ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தலாம் போல என அவரை கண்டமேனிக்கு கிண்டலடித்து வருகின்றனர்

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X