2000 படங்களில் நடித்தவர்.. முன்னணி ஆபாச பட நடிகர் மீது பாலியல் வன்கொடுமை புகார்.. திடீர் பரபரப்பு!
லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாலியல் பட நடிகர் மீது 3 பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல ஆபாச பட நடிகர் ரான் ஜெரமி. வயது 67. இவர் 2000-க்கும் அதிகமான பாலியல் படங்களில் நடித்துள்ளார்.
இதற்காகவே புகழ்பெற்ற ரான் ஜெரமி, அமெரிக்காவின் ஹாலிவுட் பகுதியில் வசித்து வருகிறார்.

ஹாலிவுட் படங்கள்
பாலியல் படங்கள் மட்டுமின்றி பல ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். கோஸ்ட் பஸ்டர்ச், டெட் பேங்க், த காட்பாதர் 3, த சேஸ், பேம் மிட்நைட், பாரிஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பல டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். டாப் 50 பாலியல் பட நடிகர்களில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பவர் இவர். த ஹெட்ஜேஹாக் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார்.

லெஜண்ட் ஆப் ரான்ஜெரமி
இவரது வாழ்க்கைக் கதை பார்ன் ஸ்டார்: த லெஜண்ட் ஆப் ரான் ஜெரமி என்ற பெயரில் டாக்குமென்டரியாக உருவாகி இருக்கிறது. இயக்குனர் ஸ்காட் ஜே.கில் இதை இயக்கி உள்ளார். இவர் மீது நான்கு பெண்கள், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகவும் புகார் கொடுத்துள்ளனார். இந்தப் புகார் ஹாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலியல் வன்கொடுமை
25 வயது இளம்பெண் ஒருவரை, மேற்கு ஹாலிவுட் பகுதியில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜெரமி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் கூறப்பட்டுள்ளது. மற்றும் 33 வயது பெண்ணையும் 46 வயது பெண் ஒருவரையும் இவர், வெஸ்ட் ஹாலிவுட் பாரில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்தச் சம்பவங்கள் 2017 ஆம் ஆண்டு தனித்தனியாக நடந்துள்ளது.
Recommended Video

90 வருடங்கள்
இன்னொரு 30 வயது பெண்ணை கடந்த வருடம் ஜூலை மாதம் அவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இவர்களோடு இன்னொரு புகாரும் வந்துள்ளது. அதற்கு ஆதாரம் சமர்பிக்கப்படவில்லை என்பதால் அதை வழக்கறிஞர்கள் தெரிவிக்கவில்லை. இந்த வழக்கில் அவரது குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், 90 வருடங்கள் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகள் உண்மை இல்லை என்று நம்புகிறோம் எனக் கூறியுள்ளார் அவரது மானேஜர்.


Click it and Unblock the Notifications











