twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஏசுவை லெஸ்பியனாக சித்தரிப்பதா? மைக்கேல் ஜாக்சன் மகள் படத்துக்கு உலகளவில் வலுக்கிறது கண்டனம்!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: ஒட்டுமொத்த கிறிஸ்துவ மக்களின் மனங்களையும் புண்படுத்தும் வகையில், ஏசு பிரானை லெஸ்பிய பெண்ணாக காட்சிப் படுத்தும் படத்திற்கு உலகளவில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

    பாப் உலகின் அரசனாக கருதப்படும் மைக்கேல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன் லெஸ்பியன் ஜீசஸ் ஆக 'Habit' எனும் படத்தில் நடித்துள்ளார்.

    அந்த படத்தை ரிலீஸ் செய்யக் கூடாது என்றும் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கண்டனங்கள் உலகளவில் எழுந்து வருகிறது.

    நெபோடிசம் காரணமாக நானும் சில வாய்ப்புகளை அநியாயமாக இழந்தேன்.. தனுஷ் பட ஹீரோயின் திடீர் பரபரப்பு! நெபோடிசம் காரணமாக நானும் சில வாய்ப்புகளை அநியாயமாக இழந்தேன்.. தனுஷ் பட ஹீரோயின் திடீர் பரபரப்பு!

    கிறிஸ்துவத்தை விமர்சித்து

    கிறிஸ்துவத்தை விமர்சித்து

    ரான் ஹாவர்ட் இயக்கத்தில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான டாவின்சி கோட் திரைப்படத்தில், ஏசுவை கடவுள் இல்லை என்றும், சாதாரண மனிதன் என்றும், அவரது பரம்பரையில் வந்த ரத்த வாரிசு இன்னும் உயிரோடு இருப்பதாகவும் காட்சிப் படுத்தி இருந்தனர். டாம் ஹேங்க்ஸ் நடிப்பில் வெளியான அந்த படத்திற்கு உலகளவில் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. ஆனாலும், பல நாடுகளில் அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

    வரிசையாக

    வரிசையாக

    அந்த படத்தின் தொடர்ச்சியாக ஏஞ்சல்ஸ் அண்ட் டெமன்ஸ், இன்ஃபெர்னோ என வரிசையாக கிறிஸ்துவ மத நம்பிக்கைகளை உடைக்கும் அளவுக்கான படங்களும், மத நம்பிக்கையை வீழ்த்தும் பல படங்களும் உலகளவில் வெளியாகி சர்ச்சையை கிளப்பி வைரலாகின. பல கிறிஸ்துவர்கள் அதுபோன்ற படங்களை பார்ப்பதே பாவ செயலாக கருதி, அதை புறக்கணித்து வருகின்றனர்.

    டிரான்ஸ்

    டிரான்ஸ்

    இந்த ஆண்டு தொடக்கத்தில் ஃபகத் ஃபாசில், நஸ்ரியா நடிப்பில் மலையாளத்தில் வெளியான டிரான்ஸ் படத்தில், ஏசுவின் பெயரால் ஜெபக் கூட்டங்கள் நடத்தி எப்படி ஏமாற்று வேலைகள் நடக்கின்றன என்பதை தோலுரித்துக் காட்டி இருந்தார் இயக்குநர் அன்வர் ரஷீத். ஆனால், அந்த படத்தின் ரிலீசுக்கும் பல தரப்பினர் தடை கோரியது குறிப்பிடத்தக்கது.

    லெஸ்பியனாக

    லெஸ்பியனாக

    இந்நிலையில், இயக்குநர் ஜானல் ஷர்ட் க்ளிஃப் இயக்கத்தில் பெல்லா தோர்ன், பாரிஸ் ஜாக்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘Habit' படத்தில், லெஸ்பியன் ஜீசஸ் கதாபாத்திரத்தில் மைக்கேல் ஜாக்சனின் மகள் பாரிஸ் ஜாக்சன் நடித்திருப்பது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. விரைவில் ரிலீசாக உள்ள அந்த படத்தை தடை செய்ய கோரிக்கைகள் எழுந்துள்ளன.

    2 லட்சத்து 60 ஆயிரம் பேர்

    2 லட்சத்து 60 ஆயிரம் பேர்

    கிறிஸ்துவ போபியா என்றும், குப்பை படம் என்றும் இந்த படத்திற்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. Change.org என்ற நிறுவனம் இதுதொடர்பாக நடத்தியுள்ள கையெழுத்து இயக்கத்தில் கிட்டத்தட்ட 2 லட்சத்து 60 ஆயிரம் பேர் இந்த படத்தின் ரிலீசுக்கு எதிராக கையெழுத்திட்டுள்ளனர். ஹாலிவுட்டில் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த படத்தை பார்க்க வேண்டும் என்றும் சிலர் ஆர்வம் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    Michael Jackson’s daughter, Paris, has landed a huge role in a new movie. Of course, this is not an ordinary film and has sparked huge controversy in the USA.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X