சிறந்த படத்துக்கான ஆஸ்கர் பாராசைட் படத்துக்குத்தான்.. அடித்துச் சொல்லும் பிரெடிக்‌ஷன் ரிப்போர்ட்!

Recommended Video

Parasite Crew in British Academy Film Awards - Video

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் 2020 விருது விழாவில் சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருதை Parasite படம் தான் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒன் ஷாட் மூவி என்ற பெருமை கொண்ட 1917 மற்றும் ஜோக்கர் படங்களுக்கு சிறந்த படத்துக்கான ஆஸ்கர் விருது கிடைக்காதா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

வரும் பிப்ரவரி 9ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் ஆஸ்கர் விருது விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

ஆஸ்கர் பிரெடிக்‌ஷன்

ஆஸ்கர் பிரெடிக்‌ஷன்

சினிமா உலகின் உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருது விழா வரும் பிப்ரவரி 9ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது. ஆஸ்கர் விருது விழா நெருங்கியுள்ள நிலையில், ஆஸ்கர் பிரெடிக்‌ஷன் வைரலாகி வருகிறது. ஆஸ்கர் விருது விழாவில் வழங்கப்படும் 24 பிரிவுக்கான கணிப்பையும் ரசிகர்கள் சினிமா வல்லுநர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

சிறந்த படம் பாராசைட்

சிறந்த படம் பாராசைட்

இந்த ஆஸ்கர் பிரெடிக்‌ஷனில் சிறந்த படத்திற்கான விருது இயக்குநர் Bong Joon-ho இயக்கிய Parasite படத்திற்கு தான் கிடைக்கும் என பலரும் கணித்து வருகின்றனர். 1917, Joker, Ford vs Ferrari, The Irishman, Little Women, Jojo Rabbit, Marriage Story உள்ளிட்ட படங்கள் சிறந்த படத்திற்கான போட்டியில் உள்ள நிலையில், பேராசைட் படம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.

பாராசைட்டுக்கு ஏன்?

பாராசைட்டுக்கு ஏன்?

பாராசைட் என்பதற்கு ஒட்டுண்ணி என்ற அர்த்தம். ஏழை - பணக்காரர்கள் வித்தியாசத்தை நகை முரணாக சித்தரித்துள்ளது இந்த படம். ஏழைகளுக்கு பணக்காரர்கள் மீது ஏன் கோபம் எழுகிறது? என்பதையும், ஏழைகளை வேலைக்காரர்களாக பணக்காரர்கள் ஏன் பார்க்கிறார்கள்? என்பதையும் அரசியல் கலந்து அழுத்தம் திருத்தமாக சொல்லியுள்ள பாராசைட் படத்துக்கு ஆஸ்கர் ரசிகர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது.

அதே சமயம்

அதே சமயம்

அதே சமயம் சாம் மெண்டஸ் இயக்கத்தில் உருவான 1917 படத்துக்குத் தான் சிறந்த படத்திற்கான ஆஸ்கர் கிடைக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் பலர் தெரிவித்து வருகின்றனர். மேலும், சிலர், டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் வெளியான ஜோக்கர் திரைப்படத்துக்குத் தான் விருது கிடைக்கும் என்றும் அடித்துச் சொல்கின்றனர்.

நெட்பிளிக்ஸ் லீலை

நெட்பிளிக்ஸ் லீலை

மேலும், நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள பல படங்கள் இந்த ஆண்டு ஆஸ்கர் போட்டியில் அதிக அளவு இடம் பெற்றுள்ளதால், ஆஸ்கர் ரேஸில் அதிக விருதுகளை அள்ள நெட்பிளிக்ஸ் நிறுவனம் கோடிக் கணக்கில் செலவு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுக்கள் எழுந்து வருகின்றன. இதனால், ஐரிஷ்மேன் படத்திற்கு ஆஸ்கர் கிடைத்தாலும் கிடைக்கும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சிறந்த நடிகர்

சிறந்த நடிகர்

சிறந்த நடிகருக்கான கணிப்பில் ஒற்றைத் தேர்வாக ஜோக்கர் நாயகன் ஜோக்வின் பீனிக்ஸ் பெயர் தான் இடம்பெற்றுள்ளது. சிறந்த நடிப்புக்கான கோல்டன் குளோப் உள்ளிட்ட பல விருதுகளை அள்ளிய ஜோக்வின் பீனிக்ஸ் ஆஸ்கரையும் தட்டிச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை நடிகருக்கான விருது Once Upon a Time படத்தில் நடித்த பிராட் பிட்டுக்கு கிடைக்கும் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X