Priyanka Chopra: பிரியங்கா சோப்ராவின் அடுத்த ஹாலிவுட் படம்.. ஜான் சினாவோட ஜோடி போடுறாரா?
லாஸ் ஏஞ்சல்ஸ்: பாலிவுட் பக்கமே இனி வரவே மாட்டேன் என்கிற நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், அவரது நடிப்பில் உருவாக உள்ள அடுத்த ஹாலிவுட் படம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
உலக அழகி பட்டம் வென்ற பிரியங்கா சோப்ரா நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தமிழன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். அதன் பின்னர் பாலிவுட் படங்களில் நடிக்க ஆரம்பித்த பிரியங்கா சோப்ரா முன்னணி ஹீரோயினாக வலம் வந்தார்.
பிரியங்கா சோப்ரா மற்றும் தீபிகா படுகோன் இடையே தான் கடும் போட்டி நிலவி வந்தது. ஷாருக்கான், சல்மான் கான் என டாப் ஹீரோக்களுடன் பிரியங்கா சோப்ரா நடித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் பாலிவுட் படங்களை தவிர்க்க ஆரம்பித்து விட்டு ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்த சென்று விட்டார் பிரியங்கா சோப்ரா.

ஹாலிவுட்டில் பிரியங்கா சோப்ரா
அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்காகவே பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் என ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கையில். பாலிவுட்டில் இருந்து ஒரு சிலரால் வேண்டுமென்றே கார்னர் செய்யப்பட்டதன் விளைவாகவே ஹாலிவுட்டுக்கு நகர்ந்தேன் என சமீபத்தில் பிரியங்கா சோப்ரா பேட்டி ஒன்றில் வெளிப்படையாக கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கரண் ஜோஹர் தான் ஆலியா பட்டை பாலிவுட்டில் பெரிய நடிகையாக மாற்ற பிரியங்கா சோப்ராவையே ஓரங்கட்டினார் என்றும் குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன. நடிகை கங்கனா ரனாவத்தும் கரண் ஜோஹர் தான் இதற்கு காரணம் என குற்றம்சாட்டினார்.
ஆனால், சமீபத்தில், நடைபெற்ற விழா ஒன்றில் கரண் ஜோஹர் உடன் பிரியங்கா சோப்ரா செம கேஷுவலாக கட்டிப்பிடித்துப் பேசிய வீடியோக்கள் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தின.
ஜான் சினாவுடன் இணைந்து
இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க அடுத்ததாக பிரியங்கா சோப்ரா நடிக்க உள்ள ஹாலிவுட் படம் குறித்த ஹாட் அப்டேட்கள் வெளியாகி உள்ளன. கேர்ள் ரைஸிங் எனும் ஆங்கில ஆவணப்படத்தில் நடித்த பிரியங்கா சோப்ரா முதன் முதலில் 2017ம் ஆண்டு டுவைன் தி ராக் ஜான்ஸன் நடிப்பில் வெளியான பேவாட்ச் படத்தில் வில்லியாக நடித்து ஹாலிவுட்டில் கால் பதித்தார்.
அதன் பிறகு, எ கிட் லைக் ஜேக், இஸ் இன் இட் ரொமான்டிக், சேஸிங் ஹேப்பினஸ், வி கேன் பி ஹீரோஸ், தி ஒயிட் டைகர், மேட்ரிக்ஸ் 4ம் பாகம் என பல ஹாலிவுட் படங்களில் நடித்து அசத்தினார். லவ் அகைன் எனும் படத்தில் தற்போது நடித்து முடித்துள்ள பிரியங்கா சோப்ரா ருசோ பிரதர்ஸின் சிட்டாடல் வெப்சீரிஸிலும் நடித்துள்ளார்.

இந்நிலையில், அடுத்ததாக 'ஹெட்ஸ் ஆஃப் ஸ்டேட்' எனும் படத்தில் ஜான் சினா மற்றும் இட்ரிஸ் எல்பாவுடன் இணைந்து நடிக்கப் போவதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை இலியா நய்சுல்லர் அமேசான் தயாரிப்பில் இயக்க உள்ளார்.
ரூசோ பிரதர்ஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள ஆக்ஷன் வெப்சீரிஸான சிட்டாடல் இந்த ஏப்ரல் மாதம் 28ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்கான ப்ரோமோஷனில் பிசியாகி உள்ளார் பிரியங்கா சோப்ரா.


Click it and Unblock the Notifications











