மேட்ரிக்ஸ் ஷூட்டிங்கின் முதல் நாளில் கீனு ரீவ்ஸ் என்ன சொன்னார் தெரியுமா? மனம் திறந்த பிரியங்கா!

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் படத்தில் இந்திய நடிகர்கள் நடிப்பதே ஒரு பெருமையான விஷயமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், உலகம் முழுக்க ரசிகர்கள் அதிகம் கொண்ட மேட்ரிக்ஸ் புதிய பாகத்தில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமைப்பட வேண்டிய தருணம் தான்.

இந்நிலையில், மேட்ரிக்ஸ் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கின் போது பிரியங்கா சோப்ராவிடம் ஹீரோ கீனு ரீவ்ஸ் சொன்ன விஷயத்தை தற்போது ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.

மேட்ரிக்ஸ் ரிலீஸ் எப்போ

மேட்ரிக்ஸ் ரிலீஸ் எப்போ

டிசம்பர் 22ம் தேதியான நாளை உலகமெங்கும் மேட்ரிக்ஸ் படத்தின் 4ம் பாகம் வெளியாகிறது. 22 ஆண்டுகளுக்கு முன்னதாக 1999ம் ஆண்டு மேட்ரிக்ஸ் படத்தின் முதல் பாகம் வெளியானது. அப்போ ஹீரோ மற்றும் ஹீரோயினாக நடித்த கீனு ரீவ்ஸ் மற்றும் கேரி ஆன் மோஸ் இந்த படத்திலும் அதே கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கீனு ரீவ்ஸ்

கீனு ரீவ்ஸ்

தன்னை நோக்கி வரும் புல்லட்டுகளை நம்முடைய சூப்பர் ஸ்டார் பல்லால் கேட்ச் பிடிப்பது அப்படியே அந்தரத்தில் நிறுத்துவது போல பாடல் காட்சிகளில் செய்வதை பார்த்திருப்போம். ஆனால், 22 ஆண்டுகளுக்கு முன்பே கதையிலேயே ஹீரோ கீனு ரீவ்ஸ் அத்தனை புல்லட்களையும் அப்படியே ஃப்ரீஸ் செய்ய வைத்து எதிரிகளை பந்தாடுவது பார்த்து உலகமே ஆச்சர்யத்தில் ஆழ்ந்தது. 40 வருடங்களாக ஹாலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கும் கீனு ரீவ்ஸ் இன்னமும் அதே கெத்துடன் கலக்கி வருகிறார்.

பிரியங்கா சோப்ரா கதாபாத்திரம்

பிரியங்கா சோப்ரா கதாபாத்திரம்

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஒரு கதாபாத்திரம் இந்த முறை மேட்ரிக்ஸ் 4ல் இடம்பெற்றுள்ளது. சதி எனும் அந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஆடிஷன் சென்ற பிரியங்கா சோப்ராவை அப்படியே ஓகே செய்து விட்டனர். ஏற்கனவே டுவைன் ராக் ஜான்சனின் பே வாட்ச் உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்களில் நடித்துள்ள பிரியங்கா சோப்ரா உலகப் புகழ் பெற்ற மேட்ரிக்ஸ் படத்தில் சதி எனும் கதாபாத்திரத்தில் ஆக்‌ஷனில் மிரட்ட காத்திருக்கிறார்.

முதல் நாள் அனுபவம்

முதல் நாள் அனுபவம்

மேட்ரிக்ஸ் படத்தில் பல காட்சிகளில் கீனு ரீவ்ஸ் உடன் இணைந்து நடித்துள்ளேன். பெரும்பாலும், நான் தான் பேசிக் கொண்டிருப்பேன். அவர் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருப்பார். முதல் நாள் படப்பிடிப்பின் போது மொத்தம் 45 நிமிடங்கள் கீனு ரீவ்ஸ் கேரி ஆன் மோஸ், ஜடா உள்ளிட்ட மொத்த படக்குழுவினருக்கு மத்தியில் பேச வேண்டும் அதற்காக முன்னதாகவே தயார் செய்து கொண்டு பேசினேன். ஆனால், ரொம்ப நெர்வஸ் ஆகிவிட்டேன்.

கீனு ரீவ்ஸ் என்ன சொன்னார்

கீனு ரீவ்ஸ் என்ன சொன்னார்

நான் சூப்பர் நெர்வஸ் ஆனதை கவனித்த கீனு ரீவ்ஸ் அன்றைய நாளின் இறுதியில் என்னிடம் வந்து இந்த நாள் ரொம்பவே சிரமமான நாள் தான் என்பது புரிகிறது. ஆனால், அதிலும் நீங்கள் சிறப்பாகவே செயல் ஆற்றினீர்கள் என வெகுவாக பாராட்டினார். இதே போலத்தான் இனிமேலும் நீங்க கலக்கப் போறீங்க என 40 ஆண்டுகள் ஹாலிவுட்டையே கட்டி ஆட்சி செய்யும் ஒரு ஹீரோ சொல்வதை கேட்டு மிகவும் பெருமையடைந்தேன் என தனது மேட்ரிக்ஸ் ஷூட்டிங் அனுபவத்தை பகிர்ந்துள்ளார் நடிகை பிரியங்கா சோப்ரா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X