twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சை..சை.. கங்னம் பாடகரின் அடுத்த ஆல்பம் ரெடி... அரபு ரசிகர்களுக்காக சின்னதாக திருத்தம்

    By Mayura Akilan
    |

    சியோல்: கங்னம் ஸ்டைல் பாப் பாடகர் சை ( Psy) தனது அடுத்த ஆல்பத்தில் திருத்தம் செய்து வெளியிட முடிவு செய்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவருவதற்காக இந்த திருத்தத்தினை செய்ய ஒத்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார் சை.

    குதிரையை ஓட்டுவதைப் போலவோ... குதிரை குதிப்பதைப் போலவோ இருக்கும் ஸ்டைல் நடனம்தான் கங்னம். தென்கொரியாவைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் சை பாடி, ஆடி வெளியிட்ட இந்த ஒற்றைப் பாடல் யுடியூப்பில் 100 கோடிக்கும் மேற்பட்டவர்கள் பார்த்து ரசித்துள்ளனர்.

    யுடியூப்பில் அதிகம் பேர் பார்த்து ரசித்த பாடல் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. இப்போது அடுத்த ரவுண்டுக்கு தயாராகிவிட்டார் சை. தன்னுடைய புதிய பாடல் ஆல்பத்திற்கு 'ஆசரபியா' என்று பெயரிட்டுள்ளார். இதில்தான் சர்ச்சையே ஏற்பட்டுள்ளது.

    பிரபலமான குதிரை நடனம்

    பிரபலமான குதிரை நடனம்

    இணையதளத்தில் ஒரே ஒரு பாடலை வெளியிட்டு நூறு கோடிக்கும் மேல் பார்வையாளர்களை சம்பாதித்த பெருமை தென் கொரிய பாப் இசைப்பாடகர் சை(Psy) க்கு மட்டுமே.

    பெயரை சுருக்கிட்டாரே

    பெயரை சுருக்கிட்டாரே

    தென்கொரியாவில் 1977ம் ஆண்டில் பிறந்தவர் பார்க் ஜே சங். இவர் தன்னுடைய பெயரை சுருக்கி சை(Psy) என்று வைத்துக் கொண்டார். நடனம், பாட்டு மட்டுமல்ல, பாடல் எழுதுவது, நடிப்பு என பன்முகத் திறமைக் கொண்டவர் சை. ஆள் ஒன்றும் அவ்வளவு அழகாக இல்லை. மைதா மாவை உருட்டி செய்தது போல் ஒரு கலரில் இருந்தாலும் உற்சாகமான நடனம்... உடன் ஆடும் பெண்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது.

    ஒரு பாட்டு நூறு கோடி ரசிகர்கள்

    ஒரு பாட்டு நூறு கோடி ரசிகர்கள்

    கடந்த ஆண்டு நூறு கோடிக்கும் அதிகமான ரசிகர்களைக் கவர்ந்த இவரின் அடுத்த பாடல் பற்றி எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. சை தனது அடுத்த பாடல் தொகுப்பிற்கு ‘ஆசரபியா' என்ற தலைப்பை தேர்வு செய்துள்ளார்.

    அரேபியாவில் சிக்கல் வருமே

    அரேபியாவில் சிக்கல் வருமே

    இந்த வார்த்தை கொரியாவின் வழக்கு மொழியில் திருப்தியான என்ற பொருளைத் தருகிறது. அதேசமயம் ஆனால், சவுதி அரேபியாவில் இந்த ஒற்றை சொல்லானது இனத்தை அல்லது கழுதையைக் குறிக்கிறதாம். இதுதான் சர்ச்சையை எழுப்பியது.

    மனது மாறிய சை

    மனது மாறிய சை

    இது குறித்து வாய்ஸ் ஆப் அமெரிக்கா பத்திரிக்கை நிருபர் ஸ்டீவ் ஹெர்மன் ‘சை'யிடம் கேட்டுள்ளார். ஆனால் முதலில் மறுத்த அவர், பாடலின் தலைப்பு, வரிகள் மற்றும் பல்லவி அனைத்தும் மாற்றப்படும் என்று கொரியாவின் வலைத்தளம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

    யாருடைய மனசும் நோகக் கூடாது

    யாருடைய மனசும் நோகக் கூடாது

    கங்னம் ஸ்டைல் நடனம் உலகளாவிய ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதேபோல இந்த ஆல்பமும் எந்த சர்ச்சையும் இல்லாமல் உலக ரசிகர்களை கவரவேண்டும் என்று விரும்புவதாக கூறியுள்ளார் சை.

    English summary
    Psy is gearing up to release his next single, but not before he makes sure the song is politically correct. The Korean pop sensation has chosen to change the lyrics of a song that was to be called Assarabia.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X