For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  61 வயசுலயும்.. இப்படி ஹாட்டா.. டாப்லெஸ் போஸ் கொடுக்க மடோனாவால மட்டும் தான் முடியும்!

  |

  லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல அமெரிக்க பாடகி மற்றும் நடிகையான மடோனாவின் டாப்லெஸ் புகைப்படம் வெளியாகி இணையத்தை அதிர வைத்து வருகிறது.

  மடோனா பாடலா நீ.. மும்பையின் மாடலான நீ.. என கமலின் காதலா காதலா படத்தில் வரும் பாடல் வரிகளுக்கே இவர் தான் சொந்தக்காரர்.

  லைக் எ பிளேயர், ட்ரூ ப்ளூ, மடோனா, மேடம் எக்ஸ் என பல ஹிட் ஆல்பங்களை கொடுத்துள்ளவர் மடோனா.

  ஸ்ட்ராப்லெஸ் கவுனில் செம ஹாட்டாய் இருக்கும் பிக்பாஸ் பிரபலம்.. ஜொள்ளு விடும் ரசிகாஸ்!ஸ்ட்ராப்லெஸ் கவுனில் செம ஹாட்டாய் இருக்கும் பிக்பாஸ் பிரபலம்.. ஜொள்ளு விடும் ரசிகாஸ்!

  பாப் உலகின் ராணி

  பாப் உலகின் ராணி

  கிங் ஆஃப் பாப் என மைக்கேல் ஜாக்சனையும், குயின் ஆஃப் பாப் என மடோனாவையும் 80களில் இருந்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 1958ம் ஆண்டு ஆகஸ்ட் 16ம் தேதி பிறந்த மடோனா, பாடலாசிரியர், பாடகி மற்றும் நடிகை என உலகம் முழுவதும் தனது திறமைகளை நிரூபித்து, ஏகப்பட்ட ரசிகர்களை சொந்தமாக்கி உள்ளார்.

  61 வயசு

  61 வயசு

  கடந்த ஆண்டு வெளியான மேடம் எக்ஸ் எனும் மடோனாவின் பாடல் ஆல்பமும் இசை ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 61 வயதாகும் மடோனாவின் அழகும், அவரது இனிமையான குரலும் இன்னும் மாறாமல் அப்படியே இருப்பது, உலக ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி வருகிறது.

  இசை அரசி

  இசை அரசி

  1982ம் ஆண்டு வெளியான எபோனிமஸ் எனும் இசை ஆல்பத்தின் மூலம் பாடகியாக அறிமுகமான மடோனா, அடுத்த ஆண்டே, பல ஹிட் ஆல்பங்களை கொடுத்து, இசை அரசி எனும் பட்டத்தை மக்களிடம் இருந்து பெற்றார். லைக் எ வெர்ஜின், ட்ரூ ப்ளூ, கிராமி விருது வென்ற ரே ஆஃப் லைட், லைக் எ பிரேயர், டேக் எ பவ், மியூசிக், ஹங் அப், ஃப்ரோஸன், 4 மினிட்ஸ் என பல ஆல்பங்கள் மடோனாவின் புகழை உணர்த்திக் கொண்டே இருக்கும்.

  கின்னஸ் சாதனை

  கின்னஸ் சாதனை

  உலகளவில் 300 மில்லியன் இசைத் தட்டுகளை விற்ற ஒரே பிரபல பாடகி என்ற பெயரையும் பெற்று, கின்னஸ் சாதனை படைத்தவர் மடோனா. பில்போர்ட், ரோலிங் ஸ்டோன் என இசை துறையில் பிரபலமான பத்திரிகைகள் மற்றும் நிறுவனங்கள் ஆல் டைம் பிரபல பாடகர்கள் பட்டியலில் மடோனாவுக்கு என தனி இடத்தை வழங்கி உள்ளன.

  கோல்டன் குளோப்

  கோல்டன் குளோப்

  பிரபல அமெரிக்க பாடகியாக ரசிகர்கள் மனங்களை கொள்ளை அடித்து வந்த மடோனா, 1996ம் ஆண்டு நடித்த எவிடா திரைப்படம், அவருக்கு சிறந்த நடிகைக்கான கோல்டன் குளோப் விருதை வாங்கிக் கொடுத்தது. ஜோரோ நடிகர் ஆண்டோனியோ பண்டாரஸ் உடன் இணைந்து மடோனா நடித்த அந்த படத்தை ஆலன் பார்க்கர் இயக்கி இருந்தார்.

  மேலாடை அணியாமல்

  மேலாடை அணியாமல்

  61 வயதாகும் இந்த அமெரிக்க பாடகி, தற்போது மேலாடை ஏதும் அணியாமல், அரை நிர்வாணமாக நின்ற கோலத்தில், டாப்லெஸ் மிரர் செல்ஃபி புகைப்படத்தை எடுத்து, தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு, சர்வதேச ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார். இந்த வயதிலும், இப்படி ஒரு அழகான தேகமா என பலரும் வியப்பில் ஆழ்ந்து வருகின்றனர்.

  முழங்காலில் காயம்

  முழங்காலில் காயம்

  கடந்த சில மாதங்களுக்கு முன்பாக பாடகி மடோனாவின் முழங்காலில் ஏற்பட்ட காயம் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருகிறது. தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்திலும், வாக்கிங் ஸ்டிக்குடன் அவர் இருப்பது, இன்னமும் அவர் பூரணமாக குணமடையவில்லை என்பதையே காட்டுகிறது. கடந்த மே மாதம் மருத்துவமனையில் வீட்டுக்கு சென்று ஓய்வெடுத்து வந்த நிலையில், தற்போது இந்த போட்டோவை வெளியிட்டு இருக்கிறார்.

  English summary
  Despite her injury, Madonna was still sizzling as she posed topless for a mirror selfie posted to Instagram on Monday.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X