கமலுக்கு முன்பே ஹாலிவுட் செல்லும் மாதவன்
சென்னை: நடிகர் மாதவன் 1968ல் வெளியான நைட் ஆஃப் தி லிவிங் டெட் என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக்கில் நடிக்கிறார்.
ஆமீர் கான், மாதவன், ஷர்மான் ஜோஷி நடித்த இந்தி படமான 3 இடியட்ஸ் இந்தியா தவிர்த்து உலக அளவில் வசூல் சாதனை படைத்தது. அந்த படத்தை பார்த்த ஹாலிவுட் தயாரிப்பாளர் சைமன் வெஸ்டுக்கு மாதவனின் நடிப்பு மிகவும் பிடித்துவிட்டது.

நைட் ஆஃப் தி லிவிங் டெட்
இதையடுத்து வெஸ்ட் மாதவனை தான் தயாரிக்கும் படத்தில் நடிக்க வைக்க முடிவு செய்தார். சைமன் 1968ல் வெளியான நைட் ஆஃப் தி லிவிங் டெட் என்ற ஹாலிவுட் படத்தை 3டியில் ரீமேக் செய்கிறார்.

வெஸ்ட் படத்தில் மாதவன்
வெஸ்ட்டின் ஹாரர் படத்தில் மாதவன் நடிக்கிறார். ஏஞ்சலினா ஜூலி நடித்த டூம்ப் ரைடர், சில்வர்ஸ்டார் ஸ்டாலோன் நடித்த எக்ஸ்பென்டபிள்ஸ், நிக்கோலஸ் கேஜ் நடித்த கான் ஏர் உள்ளிட்ட பல பிரபல படங்களை தயாரித்தவர் வெஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட்டில் மாதவன்
சைமன் வெஸ்ட் மற்றும் குழுவினருடன் சேர்ந்து அமெரிக்க சினிமாவில் பணிபுரிவதில் மகிழ்ச்சி. வெஸ்ட் ஹாலிவுட்டின் சிறந்த த்ரில் படங்களை கொடுத்தவர், கொடுத்து வருபவர். அவருடன் பணியாற்றுவது எனக்கு கௌரவம். 3டி படத்தில் நடிபத்தில் த்ரில்லாக உள்ளது. 3 இடியட்ஸில் எனது நடிப்பு தனக்கு மிகவும் பிடித்திருந்தது என்று வெஸ்ட் தெரிவித்தார் என மாதவன் தெரிவித்துள்ளார்.

கமலும் போகிறார்
வெஸ்ட்டின் படத்தில் மாதவன் முன்னாள் கடற்படை அதிகாரியாக வருகிறாராம். உலக நாயகன் கமல் ஹாஸன் ஹாலிவுட் படத்தில் நடிக்கவிருக்கிறார். அவருக்கு முன்பாகவே மாதவன் ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











