twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உனக்கென்ன பெரிய ராமானுஜன்னு நெனப்போ? - ஹாலிவுட் பட வசனம் இது!

    By Shankar
    |

    உனக்கென்ன பெரிய ராமானுஜன்னு நெனப்போ? - ஆங்கிலத்தில் இப்படி ஒரு வசனம் ஒரு ஹாலிவுட் படத்தில் வந்திருக்கிறதாம்.

    அந்த அளவு புகழ்பெற்ற கணித மேதை, அதுவும் நம்ம ஊர்க்காரரை நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கிறது?

    இந்த ஆதங்கத்தோடு ஒரு படம் எடுக்கிறார், ஞான ராஜசேகரன். பாரதி, மோக முள், பெரியார் என்று பெயர் சொல்லும் படங்களை எடுத்தவர். இப்போது கணித மேதை ராமானுஜனின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கிக் கொண்டிருக்கிறார்.

    Ramanujan, movie to honour our own genius

    இந்தப் படம் குறித்து ஏற்கெனவே நாம் ஒன்இந்தியாவில் செய்திகள் வெளியிட்டுள்ளோம்.

    இந்த முறை ஞான ராஜசேகரனை சந்தித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது.

    சமூகத்துக்காக பாடுபட்ட தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை படமாக்க வேண்டும் என்ற ஆசையில்தான் பாரதியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தேன். அதற்கடுத்து பெரியார் பற்றி படத்தை எடுக்கவேண்டும் என்று மக்கள் விரும்பியதாலேயே 'பெரியார்' படத்தை எடுத்தேன்.

    ஹாலிவுட் படத்தில்

    இந்த படத்தை நான் எடுக்கக் காரணம். நான் ஹாலிவுட் படம் ஒன்று பார்த்துக் கொண்டிருந்த வேளையில் அந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் 'உனக்கு பெரிய ராமானுஜன்னு நினைப்போ' என்ற ஒரு வசனத்தை பேசுகிறது.

    தமிழரான ராமானுஜரின் புகழ் ஹாலிவுட் வரை பரவிய அளவுக்கு நம்முடைய மக்களுக்கு அவருடைய பெருமைகள் சென்றடையவில்லையே என்ற ஆதங்கம் இருந்தது. அதனாலேயே இந்த படத்தை எடுக்க முன்வந்தேன்.

    தமிழ் ரசிகர்கள்

    உலகத்தில் உள்ள எல்லா ரசிகர்களையும்விட தமிழ் ரசிகர்கள்தான் நல்ல படங்களுக்கு வரவேற்பு கொடுக்கிறார்கள். அவர்கள் தீர்மானம் செய்துவிட்டால் தற்போதுள்ள வர்த்தக சினிமாவை அப்படியே தலைகீழாக புரட்டிப் போடமுடியும். அவர்களின் ரசனைக்கேற்ப படங்களை எடுப்பது சிரமம்.

    சொல்ல வருவதை நேர்த்தியாக சொன்னால் மக்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள். அவர்களை நம்பித்தான் இந்த படத்தை எடுத்துள்ளேன். நான் விருதுக்காக படம் எடுக்கவில்லை. மக்கள் நம் படத்துக்கு கொடுக்கும் ஆதரவுதான் முக்கியம்.

    அறிவாளியாகப் பிறந்துவிட்டால்

    இந்தியாவில் ஒருவன் அறிவாளியாக பிறந்தால் அவனை இந்த சமூகம் எந்தமாதிரி அணுகுகிறது என்பதை இப்படம் சொல்லும். ராமானுஜன் வாழ்க்கை வரலாற்றை படிக்கும்போது, ஒருவன் அறிவாளியாக பிறந்தால் அவன் சமூகத்தில் எப்படியெல்லாம் அவஸ்தைப்படுகிறான் என்பதற்கு ராமானுஜன் ஒரு உதாரணம் என்று எண்ணத் தோன்றுகிறது.

    ராமானுஜரின பல கணித சமன்பாடுகளை இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அப்பேர்ப்பட்ட மேதைக்கு தர வேண்டிய மரியாதை நாம் தருகிறோமா...

    தமிழ் - ஆங்கிலம்

    இப்படத்தை தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது. கும்பகோணம், சென்னை, நெல்லூர், லண்டன் ஆகிய இடங்களில் படமாக்கியுள்ளோம். படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன," என்றார்.

    ஜெமினி - சாவித்திரி பேரன்

    இப்படத்தில் அபிநய் என்ற புதுமுகம் ராமானுஜனாக நடிக்கிறார். மறைந்த நடிகர் ஜெமினி - சாவித்திரியின் பேரன்தான் அபிநய். பாமா என்ற மலையாள நடிகை அவருக்கு மனைவியாக நடித்துள்ளார்.

    நிழல்கள் ரவி, அப்பாஸ், சரத்பாபு, மதன் பாப், தலைவாசல் விஜய், மனோபாலா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். இப்படத்தை ஸ்ரீவத்சன், சுஷாந்த் தேசாய், சரண்யன், சிந்து ஆகியோர் தயாரிக்கின்றனர். ரமேஷ் விநாயகம் இசையமைத்துள்ளார். சன்னி ஜோசப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    English summary
    Ramanujan movie is the life history of Tamil mathematician Ramanujan, directed by Gnana Rajasekaran.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X