காதலரை தூக்கிப்போட்டு துவைத்த பிரபல இயக்குநரின் மகள்.. கைதுக்கு பின்னாடி உள்ள காரணம் இதானாம்!

சென்னை: பிரபல இயக்குநரின் மகள் கைது செய்யப்பட்டதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

உலக அளவில் பெரும் வரவேற்பை பெற்று வசூலை குவித்த படம் ''ஜூராசிக் பார்க்''. இந்தப் படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கினார்.

மேலும் ''ஹுக்'', ''கேச் மீ இஃப் யூ கேன்'', ''வார் ஆஃப் த வேர்ட்ஸ்'' உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி இருக்கிறார் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க். உலகின் சிறந்த இயக்குநர்களில் ஒருவரான இவர் ஆஸ்கர் உட்பட பல்வேறு விருதுகளை குவித்திருக்கிறார்.

 ஆபாச படங்கள்

ஆபாச படங்கள்

இந்நிலையில் இவரது வளர்ப்பு மகள் மைக்கேலா ஸ்பீல்பெர்க் ஆபாச படத்தில் நடிப்பதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ஹாலிவுட் மட்டுமின்றி உலக சினிமா ரசிகர்களை அதிர வைத்துள்ளது. தற்போது அதுபோன்ற படங்களை மைக்கேலா தயாரித்து வருகிறார். சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் மைக்கேலா இந்த முடிவை எடுத்ததாக கூறப்பட்டது.

 பெரிதும் பேசப்பட்டார்

பெரிதும் பேசப்பட்டார்

ஆனால் ஆபாச படங்கள் எடுத்ததால் எந்த திருப்தியும் இல்லாததால் மைக்கேலா அதுபோன்று நடிக்க முடிவு செய்திருக்கிறார் என கூறப்பட்டது. இதற்கு அவரது தந்தையும் அனுமதி வழங்கியதாகவும் தகவல் வெளியானது. இந்த விவகாரம் தொடர்பாக உலகம் முழுக்கவே செய்திகளில் அடிபட்டு பெரிதும் பேசப்பட்டார் ஸ்பீல்பெர்க்கின் மகள் மைக்கேலா.

 காதலர் மீது தாக்குதல்

காதலர் மீது தாக்குதல்

இந்நிலையில் நடிகை மைக்கேலா கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென கைது செய்யப்பட்டார். பிரபல இயக்குநரின் மகள் திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், தனது காதலருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவரை கடுமையாக தாக்கியதாக மிக்கேலாவை போலீசார் கைது செய்திருக்கின்றனர்.

 24 வயது பெரியவர்

24 வயது பெரியவர்

இதற்காக சுமார் 12 மணி நேரம் ஒரு இரவு முழுக்க சிறையில் வைக்கப்பட்டார் மைக்கேலா. பின்னர் 1000 அமெரிக்க டாலர்கள் அபராதத்துடன் அவரை போலீசார் விடுவித்தனர். 23 வயதான மைக்கேலா, தன்னை விட 24 வயது பெரியவரான 47 வயதான சக் பேன்கவு என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளனர்.

 பெரும் சோகம்

பெரும் சோகம்

இந்நிலையில் இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் காதலரை தூக்கிப்போட்டு துவைத்திருக்கிறார் மைக்கேலா. ஏற்கனவே ஆபாச படங்களில் நடிக்கப்போவதாக மகள் கூறியதை கேட்டு சங்கடத்தில் உள்ளனர் பெற்றோரான இயக்குநர் ஸ்பீல்பெர்க்கும் அவரது மனைவியான கேட் கேப்ஷாவும். இந்நிலையில் காதலரை அடித்து துவைத்த சம்பவம் பெற்றோரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறதாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X