எம்ஜிஎம் நிறுவனத்தை மீண்டும் எழ வைத்த 'கமாண்டோ ஏகே 47'

By Shankar

எண்பதுகளில் வெளிவந்த ஹாலிவுட் படங்களை அதிகம் பார்த்தவர்கள் ரெட் டான் (Red Dawn) படத்தை மறந்திருக்கமாட்டார்கள்.

அதே படம் இப்போது அதே பெயரில் தயாராகி ஹாலிவுட்டில் வெளியாகி வசூலைக் குவித்து வருகிறது. இப்போது அந்தப் படம் தமிழில் கமாண்டோ ஏகே 47 என மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது.

வசூல் சாதனை

வசூல் சாதனை

புதிய ரெட் டான் படம் இருவாரங்களுக்கு முன் வெளியானது. இரண்டு நாட்களில் அமெரிக்காவில் மட்டும் 7.4 மில்லியன் டாலர்களைக் குவித்தது. முதல் வார இறுதியில் 22,00,4000 மில்லியன் டாலரை அள்ளியிருக்கிறது இந்தப் படம்.

டேன் பிராட்லி

டேன் பிராட்லி

க்ரிஸ் ஹென்ஸ்வொர்த், இசபெல் லூக்காஸ், ஜோஷ் ஹட்சர்சன், கானர் க்ருஸ் நடிக்க டேன் பிராட்லி இயக்கியுள்ளார்.

இவர் ஸ்பைடர் மேன், இண்டிபெண்டன்ஸ் டே போன்ற படங்களில் சண்டைக் காட்சிகள் ஒருங்கிணைப்பாளாராகவும், இரண்டாவது யூனிட் இயக்குநராகவும் பணிபுரிந்தவர் பிராட்லி.

எம்ஜிஎம் தயாரிப்பு

எம்ஜிஎம் தயாரிப்பு

போர் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் படம் இது. ஹாலிவுட்டின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான மெட்ரோ கோல்டுவின் மேயர் (MGM) பல போராட்டங்கள் தடங்கல்களைச் சந்தித்து தயாரித்த படம் இது.

2008 முதல் 2010 வரை...

2008 முதல் 2010 வரை...

2008ல் இப்படத்தின் தயாரிப்பு அறிவிப்பு வந்தது. படம் 2009ல் தொடங்கப்பட்டது. 2010 நவம்பரில் வெளியிடத் திட்டமிடப்பட்டது.

ஆனால் பொருளாதாரப் பிரச்சனை ஒருபக்கம் தாமதப்படுத்தியது. இன்னொரு பக்கம், சீன பயம்!

கதையில் வரும் எதிரிகள் வில்லன்கள் சீனாவிலிருந்து வருவதாக ஆரம்பத்தில் கதை உருவாக்கப்பட்டு காட்சிகளும் எடுக்கப்பட்டன. இப்படி எடுத்தால் சீனாவில் படம் எப்படி வெளியாகி வசூல் செய்யும் ? எனவே வில்லன்களை வடகொரியார்களாக மாற்றி கதை அமைத்து ஷூட் செய்தனர்.

சீன வில்லன் கொரிய வில்லனான கதை...

சீன வில்லன் கொரிய வில்லனான கதை...

படத்தில் சீனர்களை வில்லன்களாக சித்தரித்துள்ளதாக சீனாவின் 'குளோபல் டைம்' பத்திரிகையில் செய்தி வெளியாகி சர்ச்சை ஏற்பட்டது. உடனே சீனர்கள் என்பதை வட கொரியர்கள் என்று மாற்றி காட்சி அமைத்தனர்.

இதனால் பல லட்சம் டாலர்கள் இழப்பு. இருந்தாலும் சீனாவுக்கென்று 'ஒரு ஹாலிவுட் பட வியாபாரம் இருக்கிறது. எனவே சீனாவையோ சீனர்களையோ பகைத்துக் கொள்ள முடியாது என்பதால் இந்த மாற்றம்.

என்ன கதை..?

என்ன கதை..?

ஒரு அதிகாலை நேரத்தில் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தாக்கி அழிக்க முயல்கின்றனர் வடகொரியர்கள். நாட்டுக்கு நேர்ந்துள்ள ஆபத்தை சமாளிக்க ஐந்து இளைஞர்கள் திட்டம் போடுகிறார்கள்.

'வால்வரின்ஸ்' என்ற கொரில்லா படையாக இயங்கும் இவர்கள் எப்படி அந்த ஆபத்தை முறியடிக்கிறார்கள் என்பது மீதிக் கதை.

எதிர்மறை விமர்சனங்கள்

எதிர்மறை விமர்சனங்கள்

இப்படம் குறித்து ஆரம்பத்தில் பாஸிடிவ் விமர்சனங்கள் வரவில்லை. நம்ப முடியாத கதை. காதில் பூ சுற்றுகிறார்கள். சின்னப் பசங்களை வைத்துக் கொண்டு கதை விடுகிறார்கள் என்றெல்லாம் எழுதினார்கள். ஆனால் படத்தில் பரபரப்பு விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை என்பதை மட்டும் மறக்காமல் குறிப்பிட்டிருந்தனர்.

அந்த பரபரப்பும் விறுவிறுப்புமே இப்போது படத்தை வசூலில் சக்கைப் போடு வைத்துள்ளதாம்.

தமிழில்...

தமிழில்...

பல ஆங்கில படங்களை மொழி மாற்றம் செய்து வெளியிட்டு வந்த ஏ.வி.மோகன் மற்றும் ப்ளூ மேட் பிக்சர்ஸ் இணைந்து இப்படத்தை தமிழில் கொண்டு வருகின்றனர். தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளிலும் விரைவில் வெளிவர உள்ளது. ஆங்கிலத்திலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X