»   »  ஹாலிவுட் படத்திற்கு தமிழ் ப்ரொமோஷனல் பாடல்: இது தான் வேற லெவல்

ஹாலிவுட் படத்திற்கு தமிழ் ப்ரொமோஷனல் பாடல்: இது தான் வேற லெவல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: ரெசிடென்ட் ஈவில் ஹாலிவுட் படத்தை இந்தியாவில் விளம்பரப்படுத்த தமிழில் பாடல் எழுதி வீடியோ வெளியிட்டுள்ளனர்.

ரெசிடென்ட் ஈவில் படத்தின் ஆறாம் மற்றும் இறுதி பாகமான ரெசிடென்ட் ஈவில் தி ஃபைனல் சேப்டர் படம் கடந்த ஆண்டு ஜப்பான் மற்றும் அமெரிக்காவில் வெளியானது.

Resident Evil has tamil promotional song: Watch video

இந்த படம் வரும் பிப்ரவரி மாதம் இந்தியாவில் ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரமோஷனல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. வீடியோவில் வரும் பாடல் தமிழில் உள்ளது சிறப்பு.

யாரோ இவள் என்று துவங்கும் பாடல் மெர்சலாக உள்ளது. சந்தோஷ் தயநாநிதி இசையமைத்துள்ள இந்த பாடலை சுனிதா சாரதி பாடியுள்ளார். யாரோ இவள் பாடல் படத்தின் நாயகியின் அசத்தல் திறமையை பாராட்டுவதாக உள்ளது.

மில்லா ஜோவோவிச் ஆலிஸ் என்ற பெயரில் படத்தில் அதிரடி நாயகியாக வருகிறார். ஜோம்பி படத்திற்கு தமிழில் பாடல் வெளியிட்டது தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

ரெசிடென்ட் ஈவில் குழுவின் இந்த புது முயற்சி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

English summary
Resident Evil The Final Chapter Hollywood movie has a promotional song in Tamil featuring visuals from the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil