ஷில்பாவுக்கு கட்டி அணைச்சு 'உம்மா' கொடுத்த கெரேவுடன் பத்மலட்சுமி காதல்!

By Sudha

நியூயார்க்: இந்தியா வந்திருந்தபோது நம்ம ஊர் நடிகை ஷில்பா ஷெட்டியை, முருங்கை மரம் போல கீழே வளைத்து கட்டி அணைத்து முத்தம் கொடுத்து அவரை நெளிய வைத்த ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரேவும், சூப்பர் மாடல் பத்மலட்சுமிக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளதாம்.

ஆனால் இந்த காதலை இருவருமே அடக்கம் ஒடுக்கமாக வைத்துள்ளனர். தம்பட்டம் அடிக்காமல் வைத்துள்ளனர்.

சமீபத்தில் இருவரும் நியூஜெர்சியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு ராத்திரி சாப்பாட்டுக்கு சேர்ந்து வந்து சாப்பிட்டுச் சென்றுள்ளனர்.

வயசு ஜாஸ்தியா இருந்தாலும்

வயசு ஜாஸ்தியா இருந்தாலும்

கெரேவுக்கு 64 வயதாகிறது. ஆனால் லட்சுமிக்கோ 43 வயதுதான். இருவரும் சில காலமாக நெருங்கிப் பழகி வருகின்றனராம்.

தம்பதி போலவே

தம்பதி போலவே

இருவரும் காதலர்களாக இருந்தாலும் கூட கணவன் மனைவி போலவே பழகி வருவதாகவும், அன்னியோன்னியமாக ஹோட்டலில் காணப்பட்டதாகவும் நேரில் பார்த்த ஒருவர் கிசுகிசுத்துள்ளார்.

டிப்ஸ் தருகிறாராம் லச்சு!

டிப்ஸ் தருகிறாராம் லச்சு!

கெரேவுக்கு டிசைன் தொடர்பான டிப்ஸ்களை நான் பார்த்தபோது கொடுத்துக் கொண்டிருந்தார் லட்சுமி என்றும் அந்த நபர் கூறியுள்ளார்.

அவருக்கு 2வது

அவருக்கு 2வது

கெரேவுக்கு ஏற்கனவே கல்யாணமாகி விட்டது. அவரது மனைவி பெயர் கேரி லோவல். இவர் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நாயகியாக நடித்தவர். ஆனால் இந்தத் தம்பதி 2013ல் பிரிந்து விட்டது. இன்னும் விவாகரத்து ஆகவில்லை. இத்தம்பதிக்கு 14 வயதில் மகன் உள்ளார். அதேபோல

.. இவருக்கு 4வது

.. இவருக்கு 4வது

அதேபோல பத்மலட்சுமிக்கு இதுவரை 3 முறை திருமணம் நடந்துள்ளது. முதலில் மாபெரும் கோடீஸ்வரரான போர்ட்ஸ்மேனை தீவிரமாக காதலித்தார். பல வருடங்களாக இது தொடர்ந்தது. 2011ல் மூளைப் புற்றுநோயால் மரணமடைந்தார் போர்ட்ஸ்மேன். பின்னர் சல்மான் ருஷ்டியை மணந்தார். விவாகரத்து செய்தார். பிறகு ஆடம் டெல் என்பவருடன் இணைந்தார். அவர் மூலமாக 3 வயதில் மகளும் உள்ளார். பெயர் கிருஷ்ணா தியா லட்சுமி டெல்.
இப்போது கெரேவுடன் ஜோடி போட்டுள்ளார்.

ஷில்பாவை பயமுறுத்தியவர்

ஷில்பாவை பயமுறுத்தியவர்

கடந்த 2007ம் ஆண்டு இந்தியா வந்திருந்தார் கெரே. அப்போது ஒரு நிகழ்ச்சியில் ஷில்பா ஷெட்டியைப் பிடித்து இழுத்து வளைத்து சாய்த்து முத்தம் கொடுத்து அவரை நெளிய வைத்தவர் கெரே என்பது நினைவிருக்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X