கோடீஸ்வரியா இருந்தா இப்படியா? கழுத்து நிறைய முத்துக்களுடன் ஓப்பன் ஜாக்கெட்டில் கடைக்கு போன ரிஹானா!
நியூயார்க்: அமெரிக்காவின் பில்லினியர்களில் ஒருவரான பிரபல பாடகி ரிஹானா உணவு கடை ஒன்றுக்கு நள்ளிரவில் உடல் முழுக்க நகைகளுடன் சென்ற புகைப்படம் வைரலாகி வருகிறது.
ஓப்பன் ஜாக்கெட், விலையுயர்ந்த முத்துக்களை கழுத்தில் அணிந்து கொண்டு தலையில் பேஸ்பாஸ் தொப்பியையும் போட்டுக் கொண்டு பிரபல அமெரிக்க பாடகி ரிஹானா கடைக்கு சென்ற புகைப்படங்கள் பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு முதல் ஏகப்பட்ட முறை அமெரிக்காவின் நியூயார்க்கில் தனது ஆண் நண்பர் ஆசாப் ராக்கி உடன் காட்சி தந்துள்ளார் ரிஹானா.

இசை துறையை தாண்டி மற்ற ஹாலிவுட் பிரபலங்கள் பல சில பல பிசினஸ்களையும் நடத்தி நூறு கோடி அமெரிக்க டாலர்களுக்கு அதிபதியாகி உள்ளார் ரிஹானா.
சமீபத்தில் அரை நிர்வாண கோலத்தில் கழுத்தில் விநாயகர் நெக்லெஸ் உடன் போஸ் கொடுத்து பரபரப்பை கிளப்பினார். ஏகப்பட்ட இந்தியர்கள் அந்த புகைப்படத்திற்கு எதிராக தங்களின் கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.
அதன் பின்னர், டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டம் தொடர்பாக ஆதரவு ட்வீட் போட்ட ரிஹானாவுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
ஆனால், கிரிக்கெட் வீரர் சச்சின் உள்பட ஏகப்பட்ட பிரபலங்கள், இது எங்கள் நாட்டு உள்விவகாரம் இதில், நீங்கள் தலையிடத் தேவையில்லை என நடிகை ரிஹானாவுக்கு பதிலடி கொடுத்தனர். அதன் பின்னர் விவசாயிகள் பிரச்சனை தொடர்பாக பாடகி ரிஹானா எந்தவொரு கருத்தையும் வெளியிடவில்லை.


Click it and Unblock the Notifications











