அடக்கண்றாவியே.. ஆடையே அணியாமல் மெட் காலாவுக்கு அந்த பிரபல நடிகை வந்துட்டாரா?.. ஷாக்கான ஃபேன்ஸ்!

நியூயார்க்: மெட் காலா 2024 (Met Gala 2024) நிகழ்ச்சி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மெட்ரோபாலிடன் மியூசியத்தில் நடைபெற்றது. இந்த ஆண்டு இந்தியா சார்பாக நடிகைகள் தீபிகா படுகோன் மற்றும் பிரியங்கா சோப்ரா பங்கேற்காத நிலையில், பாலிவுட் நடிகை ஆலியா பட் பங்கேற்றுள்ளார்.

கிம் கர்தாஷியன், ஜெண்டயா, கெண்டல் ஜென்னர் என ஏகப்பட்ட ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியில் ரீட்டா ஓரா (Rita Ora) எனும் ஹாலிவுட் நடிகை ஆடையே அணியாமல் வந்து விட்டதாக ரசிகர்கள் அவரது புகைப்படங்களை ஷேர் செய்து ட்ரோல் செய்து வருகின்றனர்.

Rita Ora bold transparent dress at Met Gala 2024 shocks fans

ஆஸ்கர் 2024 நிகழ்ச்சியில் ஜான் சீனா நிர்வாணமாக வந்து மேடையிலேயே உடையை மாற்றியது சர்ச்சையை கிளப்பிய நிலையில், மெட் காலாவிலும் நிர்வாணமாக நடிகை வந்து விட்டாரா என ரசிகர்கள் பதறிப் போய் பார்த்து வருகின்றனர்.

மெட் காலாவில் ஆலியா பட் அசத்தல்: மெட் காலா எனும் ஃபேஷன் தொடர்பான நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. விலையுயர்ந்த ஃபேஷன் ஆடைகளை அணிந்து கொண்டு நடிகைகள் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பது வழக்கம். ஃபேஷன் டிசைனர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெறும். இந்த ஆண்டு நடிகை ஆலியா பட் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சர்வதேச ரசிகர்களையும் பிரபலங்களையும் கவர்ந்துள்ளார்.

Rita Ora bold transparent dress at Met Gala 2024 shocks fans

நிர்வாணமாக வந்தாரா ரீட்டா ஓரா: மெட் காலா 2024 நிகழ்ச்சியில் நடிகையும் பாடகியுமான ரீட்டா ஓரா அணிந்து வந்த உடையை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் என்ன இப்படி ஆடையே அணியாதது போல நிர்வாணமாக வந்திருக்காரே என பலரும் அவரை ட்ரோல் செய்து கமெண்ட்டுகளை போட்டு ஷாக்கை கிளப்பி உள்ளனர். ஆனால், ரீட்டா ஓரா நிர்வாணமாக வரவில்லை என்றும் முன்னழகை ஸ்க்ரீன் துணி போல வைத்து மறைத்துக் கொண்டும் உடல் முழுவதும் டிரான்ஸ்பரன்ட்டாக தெரிவது போல கவர் போன்ற உடையை அணிந்து கொண்டு படுபோல்டாக வந்திருப்பது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்கின்றனர்.

Rita Ora bold transparent dress at Met Gala 2024 shocks fans

யார் இந்த ரீட்டா ஓரா: 33 வயதாகும் பிரபல அமெரிக்க டிவி நடிகையும் பாடகியுமான ரீட்டா ஓரா ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் 6, ஃபிப்டி ஷேட்ஸ் ஆஃப் க்ரே, ஃபிப்டி ஷேட்ஸ் டார்க்கர், ட்விஸ்ட், டிசண்டண்ட்ஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பாம்ஷெல், எம்பயர் உள்ளிட்ட பல வெப்சீரிஸ்களில் நடித்துள்ளார். இந்த மெட் காலா நிகழ்ச்சியில் அவர் ஆடை அணியாமல் முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டில் கிடைத்த மணிகளை ஆடையாக்கி அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X