twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எத்தனை உயிர் போனாலும் கவலை படமாட்டார்.. டிரம்பை கிழித்துத் தொங்கவிட்ட ராபர்ட் டி நீரோ!

    |

    லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவில் கொரோனா வைரஸால் எத்தனை உயிர்கள் பலி ஆனாலும், அதிபர் டிரம்புக்கு கொஞ்சம் கூட கவலையில்லை என ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ வெளிப்படையாக கூறியுள்ளார்.

    உலக சினிமா ரசிகர்கள் கொண்டாடும் தி காட் ஃபாதர் படத்தின் ஹீரோவான ராபர்ட் டி நீரோ கடந்த ஆஸ்கர் ரேஸில் நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் வெளியான தி ஐரிஷ்மேன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான போட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

    நேற்று இரவு பிபிசி தொலைக்காட்சியின் நியூஸ் நைட் நிகழ்ச்சிக்கு ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ அளித்த பிரத்யேக பேட்டியில் கொரோனா தாக்கத்தில் இருந்து அமெரிக்கர்களை காப்பாற்றும் முயற்சியில் அதிபர் டிரம்ப் சிறு முனைப்பு கூட இதுவரை காட்டவில்லை என்றும், எத்தனை அமெரிக்கர்கள் இந்த கொடிய நோயால் உயிர் இழந்தாலும் அதனை பற்றி கவலைப்படாமல், வெள்ளை மாளிகையில் ஷேக்ஸ்பியர் நாடகத்தை அரங்கேற்றி கொண்டாடி கொண்டிருப்பார் டிரம்ப் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

    Robert De Niro says Trump doesnt care how many die from Covid

    உலகிலேயே மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் தான் சுமார் 13 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட 80 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் கொரோனா நோய்க்கு பரிதாபமாக கடந்த 2 மாதங்களில் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    Robert De Niro says Trump doesnt care how many die from Covid

    மற்ற நாடுகள் கொரோனா பரவலை தடுக்க பல கட்ட ஏற்பாடுகள் செய்து வரும் நிலையில், எந்தவொரு முயற்சியையும், அறிவியல் அறிஞர்கள், மருத்துவ நிபுணர்கள் என யாருடைய ஆலோசனையையும் டிரம்ப் செய்யாததே இப்படி ஒரு பேரழிவு அமெரிக்கா சந்தித்து வரக் காரணம் எனவும் கடுமையாக சாடியுள்ளார்.

    Recommended Video

    லாக்டவுன் பற்றி அன்றே சொன்ன எம்.ஜி.ஆர்

    கோத்தகிரி சொகுசு பங்களாவுக்கு சென்ற நடிகர் ராதாரவி.. வீட்டிலேயே தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை!கோத்தகிரி சொகுசு பங்களாவுக்கு சென்ற நடிகர் ராதாரவி.. வீட்டிலேயே தனிமைப்படுத்திய சுகாதாரத்துறை!

    டாக்ஸி டிரைவர், காட் ஃபாதர், ஜோக்கர் மற்றும் தி ஐரிஷ்மேன் என பல பிளாக்பஸ்டர் படங்களில் தனது நடிப்பால் ஹாலிவுட் ரசிகர்களை கட்டிப் போட்டவர் ராபர்ட் டி நீரோ என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The Oscar winning actor told Newsnight's Emily Maitlis that it was a very difficult time and he found it "scary" that there wasn't stronger criticism of President Trump's response to the pandemic.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X