80 வயதில் 7வது குழந்தை.. மகளின் முகத்தை காட்டி மகிழ்ந்த ஆஸ்கர் நாயகன்.. வியக்கும் ரசிகர்கள்!
லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்த ஆண்டும் ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டுள்ள ஹாலிவுட் நடிகர் ராபர்ட் டி நீரோ தனது 80வது வயதில் 7வது குழந்தையை வளர்ப்பதில் சந்தோஷப்படுகிறேன் என தனது மகள் கியாவின் புகைப்படத்தை வெளியிட்டு உலக ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
'ரேஜிங் புல்', 'காட்ஃபாதர் 2', 'டாக்ஸி டிரைவர்', 'குட் ஃபெல்லாஸ்', 'ஐரிஷ்மேன்' என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 2 முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்ற ராபர்ட் டி நீரோ இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்கர் விருது விழாவில் 'கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்' படத்துக்காக சிறந்த துணை நடிகர் பிரிவில் நாமினேட் ஆகி உள்ளார்.

80 வயதில் 7வது குழந்தை: அபவுட் மை ஃபாதர் படத்தின் ப்ரமோஷனுக்காக பேட்டியளித்த ராபர் டி நீரோவிடம் உங்க 6 குழந்தைகள் எப்படி இருக்கின்றனர் என தொகுப்பாளர் கேள்வி கேட்க, மன்னிக்கணும் மொத்தம் 7 சமீபத்தில் தான் ரிலீஸ் ஆனது என கடந்த ஆண்டு மே மாதம் 7வது குழந்தைக்கு தந்தையான விவரத்தை தெரிவித்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
ஆஸ்கர் நாயகன்: 2 முறை ஆஸ்கர் விருதுகளை வென்று உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளவர் ராபர்ட் டி நீரோ. அவரது படங்களை பார்த்த மாத்திரத்திலேயே அவரது ரசிகராக மாற்றிவிடும். நடிப்பில் மட்டுமில்லை காதல் விவகாரங்களிலும் படு கில்லியாக இந்த வயதிலும் செயல்பட்டு வருகிறார் ராபர்ட் டி நீரோ என்பது தான் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

பலருடன் உறவு: டயானா அபாட் என்பவரை 1976ல் திருமணம் செய்துக் கொண்ட ராபர்ட் டி நீரோ 1988ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். அடுத்து கிரேஸ் ஹைடவர் எனும் சமூக ஆர்வலர் இவர் மீது காதல் வலையில் விழுந்த நிலையில் இருவரும் 1996ல் திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால், கடந்த 2018ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் டைவர்ஸ் பெற்றனர். இந்த 2 மனைவிகள் மூலமாக 6 குழந்தைகளுக்கு தந்தையான ராபர்ட் டி நீரோ கடந்த ஆண்டு டிஃபானி சென் என்பவருடன் உறவில் இருந்த நிலையில், 7வதாக பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.
80 வயதில் குழந்தை வளர்ப்பு: ராபர்ட் டி நீரோவுக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்த முதல் பெண் குழந்தை ட்ரேனாவுக்கு தற்போது 51 வயதாகிறது. மேலும், ரஃபேல் (46), இரட்டையர்கள் ஜூலியன் - ஆரோன் (27), எலியட் (27), ஹெலென் கிரேஸ் (11) என 6 குழந்தைகள் உள்ள நிலையில், 80வது வயதில் 7வது குழந்தையான கியாவை வளர்ப்பது குறித்து மகிழ்ச்சியை சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார் ராபர்ட் டி நீரோ. மேலும், தனது குழந்தையின் முகத்தையும் அவர் காட்டியுள்ள புகைப்படம் உலகம் முழுவதும் டிரெண்டாகி வருகிறது. 80 வயதில் மகளை வளர்ப்பது சந்தோஷமாக உள்ளது. என்னால் முடிந்த வரை அவருடன் நாட்களை செலவிடுவேன் எனக் கூறியுள்ளார்.
ஆஸ்கர் வெல்வாரா?: மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கத்தில் வெளியான கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன் படத்தின் நாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதுகளுக்கு இந்த ஆண்டு நாமினேட் ஆகவில்லை. ஆனால், அந்த படத்தில் துணை நடிகராக நடித்த ராபர்ட் டி நீரோ சிறந்த துணை நடிகர் பிரிவில் போட்டியிடுகிறார். இவருக்கும் அயன்மேன் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியருக்கும் கடும் போட்டி உள்ள நிலையில், யாருக்கு ஆஸ்கர் கிடைக்கும் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











