Robert De Niro: எப்புட்றா.. 79 வயதில் 7வது குழந்தைக்கு அப்பாவான ராபர்ட் டி நீரோ.. காட் ஃபாதர் தான்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: தி காட் ஃபாதர் 2 உள்ளிட்ட பல பிரபல ஹாலிவுட் படங்களில் நடித்த ஆஸ்கர் நாயகன் ராபர்ட் டி நீரோ தனது 79வது வயதில் 7வது குழந்தைக்கு தந்தையாகி இருப்பதாக சமீபத்திய பேட்டியில் கூறி ஒட்டுமொத்த உலக ரசிகர்களையே ஷாக் ஆக்கி உள்ளார்.

'ரேஜிங் புல்', 'காட்ஃபாதர் 2', 'டாக்ஸி டிரைவர்', 'குட் ஃபெல்லாஸ்', 'ஐரிஷ்மேன்' என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். 2 முறை சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது வென்றவர். தற்போது 'கில்லர்ஸ் ஆஃப் தி ஃபிளவர் மூன்', 'அபவுட் மை ஃபாதர்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

Robert De Niro welcomes his 7th child at the age of 79 shocks everyone

அபவுட் மை ஃபாதர் படத்தின் ப்ரமோஷனுக்காக பேட்டியளித்த ராபர் டி நீரோவிடம் உங்க 6 குழந்தைகள் எப்படி இருக்கின்றனர் என தொகுப்பாளர் கேள்வி கேட்க, மன்னிக்கணும் மொத்தம் 7 சமீபத்தில் தான் ரிலீஸ் ஆனது என சொல்லி ஹாலிவுட் ரசிகர்களையும் பிரபலங்களையுமே திக்குமுக்காட செய்து விட்டார்.

நடிப்பு ராட்சசன்: உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ள ராபர்ட் டி நீரோவின் நடிப்பு ஆற்றல் அவரது படங்களை பார்த்த மாத்திரத்திலேயே அவரது ரசிகராக மாற்றிவிடும்.

Robert De Niro welcomes his 7th child at the age of 79 shocks everyone

நடிப்பில் மட்டுமில்லை காதல் விவகாரங்களிலும் படு கில்லியாக இந்த வயதிலும் செயல்பட்டு வருகிறார் ராபர்ட் டி நீரோ என்பது தான் ரசிகர்களை 'எப்புட்றா' என கேட்க வைக்கிறது.

எத்தனை மனைவிகள்: 1976ம் ஆண்டு டயானா அபாட் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட ராபர்ட் டி நீரோ 1988ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 1997ம் ஆண்டு கிரேஸ் ஹைடவர் எனும் சமூக ஆர்வலர் இவர் மீது காதல் வலையில் விழுந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர். ஆனால், கடந்த 2018ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்த இரு மனைவிகள் மூலமாக 6 குழந்தைகளுக்கு அப்பாவான ராபர்ட் டி நீரோ தற்போது 7வது குழந்தையை யாருடன் பெற்றுக் கொண்டார் என்பதே படு சீக்ரெட்டாக இருக்கிறது என்கின்றனர்.

Robert De Niro welcomes his 7th child at the age of 79 shocks everyone

79 வயதில் 7வது குழந்தை: ராபர்ட் டி நீரோவுக்கும் அவரது முதல் மனைவிக்கும் பிறந்த முதல் பெண் குழந்தை ட்ரேனாவுக்கு தற்போது 51 வயதாகிறது. புதிதாக பிறந்த குழந்தை அக்கா என்று அழைக்குமா? பாட்டி என்று அழைக்குமா? என்றே ரசிகர்கள் பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், ரஃபேல் (46), இரட்டையர்கள் ஜூலியன் - ஆரோன் (27), எலியட் (27), ஹெலென் கிரேஸ் (11) என 6 குழந்தைகள் உள்ள நிலையில், 79வது வயதில் 7வது குழந்தைக்கு அப்பாவாகி உள்ளார் தி காட்ஃபாதர் 2 பட நடிகர்.

7வது குழந்தையின் அம்மா யார்?: தனக்கு 7வதாக குழந்தை பிறந்துள்ளது என்பதை மட்டுமே ரிவீல் செய்த ராபர்ட் டி நீரோ அந்த குழந்தையின் அம்மா பற்றி எந்த விபரத்தையும் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், அந்த குழந்தையின் அம்மா யார் என்றும் ராபர்ட் டி நீரோவின் புதிய மனைவி யார் என்கிற கேள்வியும் ஹாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Robert De Niro welcomes his 7th child at the age of 79 shocks everyone

டிஃபானி சென் எனும் சினிமா தயாரிப்பாளருடன் தற்போது ரகசியமாக ராபர்ட் டி நீரோ உறவில் உள்ளதாக ஹாலிவுட் வட்டாரங்கள் கிசுகிசுக்கத் தொடங்கி உள்ளன. அவர் மூலமாக இந்த குழந்தை பிறந்திருக்கலாம் என்றும் கருதுகின்றனர். ஆனால், ராபர்ட் டி நீரோ அதிகாரப்பூர்வமாக அந்த 7வது குழந்தையின் அம்மா பற்றியோ அவரது 3வது மனைவி குறித்தோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X