விஜய் சம்பளத்தை விட 3 மடங்கு.. டாக்டர் டூம் படத்தில் நடிக்க ராபர்ட் டவுனி ஜூனியருக்கு இத்தனை கோடியா?

லாஸ் ஏஞ்சல்ஸ்: இந்தியாவிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்களாக ஷாருக்கான், விஜய், ரஜினிகாந்த், அல்லு அர்ஜுன் உள்ளனர். அந்த வரிசையில் பிரபாஸும் இணையப் போவதாக கூறுகின்றனர். பல ஹாலிவுட் நடிகர்களுக்கே 200 கோடி சம்பளம் என்பது இன்னமும் எட்டாக் கனியாக உள்ளதாக கூறி வரும் நிலையில், ராபர்ட் டவுனி ஜூனியருக்கு உலகிலேயே எந்தவொரு நடிகரும் வாங்காத சம்பளத்தை மார்வெல் கொடுத்திருப்பதாக கூறுகின்றனர்.

அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தில் ராபர்ட் டவுனி ஜூனியர் தானோஸை போட்டுத் தள்ள தன்னுயிரையும் சேர்த்துக் கொடுத்து விடுவார். விஜய் சேதுபதியின் மோசமான டப்பிங்கையும் மறந்து ரசிகர்கள் அயன்மேன் மரணத்திற்காக கண்ணீர் சிந்தியபடியே தியேட்டர்களை விட்டு வெளியேறினர்.

Robert Downey Jr salary

இனிமேல் மார்வெலில் அயன் மேன் கதாபாத்திரம் வராது என்று கூறப்பட்ட நிலையில், ராபர்ட் டவுனி ஜூனியரை மல்டிவெர்ஸிலாவது உயிரோடு கொண்டு வாங்க என மார்வெலிடம் ரசிகர்கள் வைத்த கோரிக்கை தற்போது டாக்டர் டூம் கதாபாத்திரமாக ராபர்ட் டவுனி ஜூனியரையே அவெஞ்சர்ஸுக்கு வில்லனாக மாற்றியுள்ளது.

அயன்மேன்: மார்வெல் படங்களிலேயே அவெஞ்சர் படங்கள் தான் அதிக வசூல் ஈட்டின. தானோஸ் என்பவனை போட்டுத் தள்ள ஒட்டுமொத்த சூப்பர் ஹீரோக்களும் தனித் தனி கதைகளாக உருவாகி கிட்டத்தட்ட பல ஆண்டுகால போராட்டமாக அந்த வில்லனை காலி செய்ய எண்ட்கேம் நடத்தி மொத்த சூப்பர் ஹீரோக்களும் தானோஸை துவம்சம் செய்யும். அதில், தனது உயிரையும் கொடுத்து மக்களுக்காகவும் மற்ற சூப்பர் ஹீரோக்களாகவும் அயன்மேன் அந்த பெரிய சம்பவத்தை செய்து முடிப்பார். அவெஞ்சர் ஹீரோக்களிலேயே கேப்டன் அமெரிக்கா, தோர் போன்றவர்களுக்கு ரசிகர்கள் அதிகம் என்றாலும், அயன்மேனுக்குத்தான் அதிகப்படியான ரசிகர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர் டூம்: அயன்மேன் உயிரிழந்த நிலையில், வோல்வரினை போல வேறவொரு மல்டிவெர்ஸில் இருந்து அயன்மேனை கொண்டு வந்தால் அதே போல போர் அடித்து விடும் என்பதால், அவரது கதாபாத்திரத்தை மாற்றி டாக்டர் டூம் எனும் வில்லனாக அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே படத்தில் டாக்டர் டூம் கதாபாத்திரத்தில் அயன்மேனை களமிறக்கப் போகிறது மார்வெல். சமீபத்தில் காமிக்கானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாஸ்க்கை கழட்டி ராபர்ட் டவுனி ஜூனியர் என்ட்ரி கொடுத்தது ஒட்டுமொத்த உலக ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது.

Robert Downey Jr salary

600 கோடி சம்பளம்: அவெஞ்சர்ஸ் டூம்ஸ்டே மற்றும் அவெஞ்சர்ஸ் சீக்ரெட் வார்ஸ் என அடுத்ததாக 2 பிரம்மாண்ட படங்களில் ராபர்ட் டவுனி ஜூனியர் நடித்துள்ளார். அதற்காக அவருக்கு 670 கோடி ரூபாய் சம்பளத்தை மார்வெல் நிறுவனம் வழங்கியிருப்பதாகவும் உலகத்திலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்றால் இவர் தான் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X