twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மிஸ்டர் பீன்: ஓய்வு பெறுகிறார் ரோவன் ஆட்கின்சன்

    By Siva
    |

    Mr Bean
    மிஸ்டர் பீன் தொடரில் இருந்து ஓய்வு பெறுகிறார் பிரபல ஹாலிவுட் நடிகர் ரோவன் ஆட்கின்சன்.

    மிஸ்டர் பீனைத் தெரியாத குட்டீஸே இருக்க முடியாது. உலகம் முழுவதும் உள்ள குட்டீஸ்களின் விருப்பத் தொடர் எது என்று கேட்டால் அவர்கள் சொல்லும் பதில் " மிஸ்டர் பீன்". அந்த நகைச்சுவை தொடரில் மிஸ்டர் பீனாக வந்து நம் வீட்டு குழந்தைகளை குலுங்க, குலுங்கச் சிரிக்க வைப்பவர் ரோவன் ஆட்கின்சன்(56).

    ஸ்கூல் விட்டு வீட்டுக்கு வரும் நம்ம வாண்டுகள் பையை ஒரு பக்கமும், ஷூவை மறுபக்கமும் வீசிவிட்டு அவசர, அவசரமாக உட்கார்வது டிவி முன்பு தான். காரணம் இந்த மிஸ்டர் பீன். இந்த தொடரை 18 மில்லியன் பேர் கண்டு ரசிக்கிறார்கள் என்றார் பாருங்களேன்.

    இந்த தொடரின் வெற்றியைப் பார்த்து அதை அடிப்படையாக வைத்து 1997-ம் ஆண்டு பீன்: தி அல்டிமேட் டிசாஸ்டர் மூவி மற்றும் 2007-ம் ஆண்டு மிஸ்டர் பீன்ஸ் ஹாலிடே என்ற இரண்டு படங்கள் வெளியாகின.

    இத்தனை பிரபலமான தொடரில் இனி மிஸ்டர் பீனாக நடிக்கப்போவதில்லை என்று ரோவன் ஆட்கின்சன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது,

    நான் இனிமேல் மிஸ்டர் பீனாக நடிக்க மாட்டேன். எனக்கு வயதாகிவிட்டது. மிஸ்டர் பீன் கதாபாத்திரம் வயதாகாமல் அப்படியே இருப்பது. அதனால் இனியும் நான் மிஸ்டர் பீனாக நடிப்பது சரியல்ல. மிஸ்டர் பீன் எப்பொழுதும் இளமையாக இருந்து தான் நான் பார்த்துள்ளேன். எனவே, வயதாகும் நான் இதில் நடிப்பதில் உகந்தது அல்ல என்றார்.

    English summary
    Rowan Atkinson(56) is retiring from Mr. Bean as he is too old to play the funny character. Mr. Bean the funny series has 18 million viewers and most of them are kids. Well, it is sad news for the kids.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X